நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

மூங்கில் பூத்தா விவசாயம் செழிக்காது

40 வருஷத் துக்கு ஒருமுறைதான் மூங்கில் பூக்கும். இந்தப் பூ, மூங்கில் நெல்லாக மாறும். இப்படி மூங்கில் விளைந்தால் எலிகளுக்குக் கொண்டாட்டம். இந்த மூங்கில் நெல்லில் இருக்கின்ற அரிசியைச் சாப்பிடுவதற்க்காக எலிகல் அதிகப்படியாக வரும். இந்த அரிசியை சாப்பிட்டால், எலிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இப்படி எலிகல் அதிகமாகிவிட்டால் அக்கம் பக்கமிருக்கின்ற பயிர்களை சேதப்படுத்தும். இதனால் தான் மூங்கில் பூத்தா விவசாயம் செழிக்காதுனு சொல்லியிருக்காங்க.



குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி