நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. 

வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற பாதிப்பை தடுக்கவும் தங்களை பாதுகாத்துகொள்ளவும் நோய்எதிர்ப்பு சக்திமிக்க கேழ்வரகு / கம்பை பயன்படுத்தியுள்ளனர். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. 

சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். மேலும்  அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.

அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.

அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்  கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. 

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படை கூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைபிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது?


புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.

அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

உடலை ஆளும் தச வாயுக்கள்

1. இதயத்தில் இயங்குவது பிராணன் (உயிர்க்காற்று)
2. உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன் (மலக்காற்று
3. கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்( நிரவுக்காற்று)
4. நாபியினிற்பது உதானன்( ஒலிக்காற்று)
5. சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன் ( தொழிற்க்காற்று)
6. நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன் (விழிக் காற்று)
7. உரோமம் புளகித்திமைப்பது கூர்மன் (இமைக் காற்று)
8. முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பது கிருகரன்  (தும்மல் காற்று)
9. ஓட்டமும்இளைப்பும்வியர்த்தலும் விளைவிப்பது  தேவதத்தன் (கொட்டாவிக் காற்று)
10.உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வது தனஞ்சயன் (கோமா போன்ற மயக்க நிலைசுய நினைவற்ற நிலை)

மூலிகைப் பொடிகளின் பெயர்களும் அதன் பயன்களும்

அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்  குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.