1. இதயத்தில் இயங்குவது பிராணன் (உயிர்க்காற்று)
2. உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன் (மலக்காற்று)
3. கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்( நிரவுக்காற்று)
4. நாபியினிற்பது உதானன்( ஒலிக்காற்று)
5. சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன் ( தொழிற்க்காற்று)
6. நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன் (விழிக் காற்று)
7. உரோமம் புளகித்திமைப்பது கூர்மன் (இமைக் காற்று)
8. முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பது கிருகரன் (தும்மல் காற்று)
9. ஓட்டமும், இளைப்பும், வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன் (கொட்டாவிக் காற்று)
10.உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வது தனஞ்சயன்
(கோமா போன்ற மயக்க நிலை, சுய நினைவற்ற நிலை)