நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Showing posts with label அடடே அப்பிடியா. Show all posts
Showing posts with label அடடே அப்பிடியா. Show all posts

தமிழ்நாட்டில் அணைகள் - ஒரு கணக்கீடு


பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லையா என்றால், இல்லை என்பது தான் பதில். ஆம் தமிழகத்தில் கலைஞரே அதிக அணைகள் கட்டியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115
சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை - 25
காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை - 25
திமுக ஆட்சியில் (21 வருடங்கள்) கட்டப்பட்டவை - 36
அதிமுக ஆட்சியில் (25 வருடங்கள்) கட்டப்பட்டவை - 29

திமுக கால - அணைகள்
01. உப்பாறு(ஈரோடு) அணை
02. சிற்றாறு I அணை
03. மணிமுக்தனாதி அணை
04. சோலையாறு அணை
05. மேல் ஆழியாறு அணை
06. கீழ் கொடையாறு அணை
07. சிற்றாறு II அணை
08. மேல் கொடையாறு அணை
09. கடான அணை
10. பரப்பலாறு அணை
11. பொன்னணியாறு அணை
12. ராமநதி அணை
13. சின்னாறு அணை
14. கருப்பாநதி அணை
15. ஏறவங்கலாறு அணை
16. குண்டேரிப்பள்ளம் அணை
17. ஹைவேய்ஸ் அணை
18. மணலாறு அணை
19. பாலாறு பொருந்தலாறு அணை
20. வரதமநதி அணை
21. வரட்டுப்பள்ளம் அணை
22. வட்டமலைக்கரை ஓடை அணை
23. வெண்ணிறாறு அணை
24. அனைக்குட்டம் அணை
25. குதிரையாறு அணை
26. நொய்யல் அதுபாளையம் அணை
27. நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை
28. ராஜதோப்புகனாறு அணை
29. பொய்கையாறு அணை
30. மொர்தனா அணை
31. சோத்துப்பாறை அணை
32. அடைவினைநர்கோவில் அணை
33. நங்காஞ்சியாறு அணை
34. செண்பகத்தோப்பு அணை
35. இருக்கன்குடி அணை
36. மாம்பழத்துறையாறு அணை
 
ஆதாரம் -  Dams in Tamilnadu 

மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடி, நீர் இருப்பு 54 டிஎம்சி - ஒரு புரிதல்


கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?
இந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர்அணை ஒன்றே போதும்.. இவைகளை விழுங்க..

காவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4-அணைகள்தான்.
1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..
2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..
3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி...
4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..
-என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்...
இவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)

நம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.
அதாவது ஒரு TMC தண்ணீர் என்பது 'One Thousand Million Cubic Feet' அதாவது 100,00,00,000. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..
ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.
அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால், 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்.
அதே ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். அதாவது நமது டாஸ்மாக்கின் ஒரு வருட வருவாய்.
அதே ஒரு TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்தால்,12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.
இப்போது எளிதாக புரிந்ததா ஒரு TMC தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..
கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி.
அதன் தண்ணீர் கொள்ளளவோ 45.05 டிஎம்சி-மட்டுமே.
ஆனால் மேட்டூர் அணையின் உயரம் என்னவோ 120 அடி. ஆனால் அதன் கொள்ளளவோ 93.4 டிஎம்சி..
அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையை காட்டிலும், நம்ம மேட்டூர் அணை இரண்டு மடங்கு கொள்ளவு உடையது...
மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.மூன்று பவானி சாகர்களை மேட்டூரில் வைக்கலாம்..
நம்ம சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க,
'இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது' -என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா?
நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 

50' அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..
75' அடியை தொட்டால் 37 டிஎம்சி..
100' அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..
ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.
அதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.

அணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா?
எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்து விடப்படுகிறது' என்பதோடு, அணையின் கொள்ளவு, நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94'  அடி...
நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57-விழுக்காடு...
அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..
‘’120' அடியில் 100' அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..
100' அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே...

(இந்த பதிவு மூத்த ஊடகவியலாளர் திரு.ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் கட்டுரையில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அவருக்கு நமது நன்றி)

 

மனுசபுத்தி தான் நிரத்தரம்

புத்திஷம், பெரியாரிஷம், கம்யூனிஷம் எல்லா இஷமும் பெயிண்டு தான். நீங்க என்ன தான் பெயிண்டு அடிச்சாலும் அது கொஞ்சகாலம் தான். அப்புறம் பெயிண்ட் உதிர்ந்து மனுசன் வெளிய வந்துருவான். மனுசபுத்தி மட்டும் தான் நிரத்தரம்

-எழுத்தாளர் பொ.வேல்சாமி

வாசிக்கப்படாத புத்தகங்கள் - Anti Library

ண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா?” என்பதுதான். நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் கேள்விதான் இது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், கல்லூரி கேண்டீனில் காபி குடித்துக் கொண்டிருக்கையில் என்னுடைய பேராசிரியர் ஒருவருடன் புத்தக வாசிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்தான் இந்த Anti-Library பற்றி கூறினார். அதாவது, நம்முடைய நூலகத்தில் அல்லது நம்முடைய சேமிப்பில் இருக்கும் புத்தகங்களில் வாசிக்கப்படாமல் இருக்கும் புத்தக சேகரிப்பை Anti-Library என்று குறிப்பிடுகிறார்கள். அதென்ன Anti-Library என்று நூல்பிடித்து சென்று தேடும்போது சில தெளிவுகள் கிடைத்தது.

இந்த Anti-Library குறித்து நஸீம் தலேப் என்ற எழுத்தாளர் தன்னுடைய “The Black Swan” புத்தகத்தில் எழுதியுள்ளார். உம்பர்த்தோ ஈகோ என்ற எழுத்தாளருடைய வாழ்வில் நடந்த சம்பவமாக இதை தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். உம்பர்த்தோ அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர். தனக்கென சொந்த நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அதில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நூல்களை சேமித்து வைத்திருந்தார். அவருடைய வீட்டிற்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி, ”ஏய் உம்பர்த்தோ, இத்தனை புத்தகங்களையும் நீங்கள் வாசித்துவிட்டீர்களா?”. இதுபோன்ற கேள்விகள் தனக்கு மிகவும் கோபமூட்டுவதாக இருக்கிறது என்று சொல்லும் உம்பர்த்தோ, தனிபட்ட நூலகம் என்பது என்னிடம் இத்தனை புத்தகங்கள் இருக்கிறது பார் என்று படோடபம் காட்டுவதற்கு இல்லை, தமக்கு தேவையான புத்தகங்களை தேவையான சமயங்களில் எடுத்து பார்த்துக்கொள்வதற்கே என்கிறார். அதை நீங்கள் உடனடியாக, கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும் என்பதும் இல்லை. 


சமீபத்தில் எழுத்தாளர் அழகியசிங்கர் தன்னுடைய பதிவில், 16 வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கு.ப.ரா குறித்த புத்தகம் ஒன்றை ஏதோ சில காரணங்களால் வாசிக்காமல் வைத்திருந்து, சாரு நிவேதிதாவின் சமீபத்திய உரையைக் கேட்ட பின்னரே வாசித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதான் Anti-Library-க்கான பொறுத்தமான எடுத்துக்காட்டு. 

ஒரு சிறந்த நூலகம் என்பது எப்போதுமே வாசிக்கப்படாத புத்தகங்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வயதாக வயதாக அனுபவமும் வாசிப்பும் பரந்துப்பட்டதாக மாறும். அந்த சமயத்தில், வாசிக்காமலையே அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நம்மை பயமுறுத்தும். ”உனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதே, நீ தெரிந்துக்கொள்ள வேண்டியது இன்னும் இவ்வளவு இருக்கு” என்று மிரட்டும். 

நம்மிடம் இருக்கும் பொதுவான பிரச்சனை இதுதான், நமக்கு தெரிந்த அல்லது நாம் அறிந்த ஒரு சிறிய உலகத்தை மட்டும் பார்த்துவிட்டு இந்த பிரபஞ்சத்தையே அளந்துவிடுவோம். அத்தகைய மனநிலையிலிருந்து வெளியேறி நாம் அறியாதது யாதென அறிந்துக்கொள்வதற்கு இந்த Anti-Library பெரிதும் உதவுகிறது.

குறிப்பு:
உம்பர்த்தோ ஈகோ – இத்தாலிய நாவலாசிரியர்.
நஸீம் தலேப் – அமெரிக்க லெபானிய எழுத்தாளர்.
அழகியசிங்கர் – எழுத்தாளர், விருட்சம் சிற்றிதழின் ஆசிரியர்.
சாரு நிவேதிதா – பின்நவீனத்துவ எழுத்தாளர். 

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட நாள்

12 ஜனவரி 1967...

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம். ஆம் இது எம்ஜியார் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா நீதி மன்றத்தில் கூறிய வார்த்தைகள்...

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. 

என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 

1967-ம் ஆண்டு,  ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. 

எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் (இராஜிவ் கொலை வழக்கு) ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். 

ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 

'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' எம்ஜியாரிடம் விளக்கினார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு,  நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. 

எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 

தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், 

‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். 

‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். 

இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, 

‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். 

இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். 

இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. 

இதுதவிர, 'காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும்' ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. 

வழக்கு விசாரணையில், 'எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்' என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' 

-என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். 

இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 

'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 

'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. 

'எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, 

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 

'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,  

ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. 

"ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், 

"ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, 

"அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், 'மை லார்டுன்னு' சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" 

-எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.

துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 

'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. 

கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். 

அப்போதுகூட, 'உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.

அதன்பின் மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 

'அந்தக் கூட்டத்தில் #எம்ஜிஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.

"எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். 

எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்"

இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா. 

மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு  மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 

1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

நன்றி: ஆ.விஜயானந்த் | விகடன்

கெர்போட்ட_நிவர்த்தி


தினசரி காலண்டரில் "இன்று கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போதுகெர்போட்ட ஆரம்பம்என்று இருப்பதை பார்த்து இந்த கேள்வி கேட்டுள்ளீர்களா?

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம்கெர்போட்ட நிவர்த்திஎன்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் 

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல. உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை, அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது. இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர். அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும், அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும். இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது. 

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா, 
எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது. இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம். 

கல்யாண மண்டபத்தில் ஆண்கள்

கல்யாண மண்டபத்தை கடந்து போகும் போது ஆண்களுக்கு ரெண்டே எண்ணம்தான் மனசுல ஓடும்...

1. இப்டியெல்லாம் நமக்கு எப்ப செஞ்சு வைப்பாங்க...?

2. இப்டிதானே நம்மளையும் வெச்சு செஞ்சாங்க

யோகாவும் தியானமும்


மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால்
அது "யோகா"

மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் 
அது "தியானம்"

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...