நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Showing posts with label உளறல். Show all posts
Showing posts with label உளறல். Show all posts

மனுசபுத்தி தான் நிரத்தரம்

புத்திஷம், பெரியாரிஷம், கம்யூனிஷம் எல்லா இஷமும் பெயிண்டு தான். நீங்க என்ன தான் பெயிண்டு அடிச்சாலும் அது கொஞ்சகாலம் தான். அப்புறம் பெயிண்ட் உதிர்ந்து மனுசன் வெளிய வந்துருவான். மனுசபுத்தி மட்டும் தான் நிரத்தரம்

-எழுத்தாளர் பொ.வேல்சாமி

வாசிக்கப்படாத புத்தகங்கள் - Anti Library

ண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா?” என்பதுதான். நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் கேள்விதான் இது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், கல்லூரி கேண்டீனில் காபி குடித்துக் கொண்டிருக்கையில் என்னுடைய பேராசிரியர் ஒருவருடன் புத்தக வாசிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்தான் இந்த Anti-Library பற்றி கூறினார். அதாவது, நம்முடைய நூலகத்தில் அல்லது நம்முடைய சேமிப்பில் இருக்கும் புத்தகங்களில் வாசிக்கப்படாமல் இருக்கும் புத்தக சேகரிப்பை Anti-Library என்று குறிப்பிடுகிறார்கள். அதென்ன Anti-Library என்று நூல்பிடித்து சென்று தேடும்போது சில தெளிவுகள் கிடைத்தது.

இந்த Anti-Library குறித்து நஸீம் தலேப் என்ற எழுத்தாளர் தன்னுடைய “The Black Swan” புத்தகத்தில் எழுதியுள்ளார். உம்பர்த்தோ ஈகோ என்ற எழுத்தாளருடைய வாழ்வில் நடந்த சம்பவமாக இதை தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். உம்பர்த்தோ அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர். தனக்கென சொந்த நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அதில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நூல்களை சேமித்து வைத்திருந்தார். அவருடைய வீட்டிற்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி, ”ஏய் உம்பர்த்தோ, இத்தனை புத்தகங்களையும் நீங்கள் வாசித்துவிட்டீர்களா?”. இதுபோன்ற கேள்விகள் தனக்கு மிகவும் கோபமூட்டுவதாக இருக்கிறது என்று சொல்லும் உம்பர்த்தோ, தனிபட்ட நூலகம் என்பது என்னிடம் இத்தனை புத்தகங்கள் இருக்கிறது பார் என்று படோடபம் காட்டுவதற்கு இல்லை, தமக்கு தேவையான புத்தகங்களை தேவையான சமயங்களில் எடுத்து பார்த்துக்கொள்வதற்கே என்கிறார். அதை நீங்கள் உடனடியாக, கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும் என்பதும் இல்லை. 


சமீபத்தில் எழுத்தாளர் அழகியசிங்கர் தன்னுடைய பதிவில், 16 வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கு.ப.ரா குறித்த புத்தகம் ஒன்றை ஏதோ சில காரணங்களால் வாசிக்காமல் வைத்திருந்து, சாரு நிவேதிதாவின் சமீபத்திய உரையைக் கேட்ட பின்னரே வாசித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதான் Anti-Library-க்கான பொறுத்தமான எடுத்துக்காட்டு. 

ஒரு சிறந்த நூலகம் என்பது எப்போதுமே வாசிக்கப்படாத புத்தகங்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வயதாக வயதாக அனுபவமும் வாசிப்பும் பரந்துப்பட்டதாக மாறும். அந்த சமயத்தில், வாசிக்காமலையே அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நம்மை பயமுறுத்தும். ”உனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதே, நீ தெரிந்துக்கொள்ள வேண்டியது இன்னும் இவ்வளவு இருக்கு” என்று மிரட்டும். 

நம்மிடம் இருக்கும் பொதுவான பிரச்சனை இதுதான், நமக்கு தெரிந்த அல்லது நாம் அறிந்த ஒரு சிறிய உலகத்தை மட்டும் பார்த்துவிட்டு இந்த பிரபஞ்சத்தையே அளந்துவிடுவோம். அத்தகைய மனநிலையிலிருந்து வெளியேறி நாம் அறியாதது யாதென அறிந்துக்கொள்வதற்கு இந்த Anti-Library பெரிதும் உதவுகிறது.

குறிப்பு:
உம்பர்த்தோ ஈகோ – இத்தாலிய நாவலாசிரியர்.
நஸீம் தலேப் – அமெரிக்க லெபானிய எழுத்தாளர்.
அழகியசிங்கர் – எழுத்தாளர், விருட்சம் சிற்றிதழின் ஆசிரியர்.
சாரு நிவேதிதா – பின்நவீனத்துவ எழுத்தாளர். 

யோகாவும் தியானமும்


மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால்
அது "யோகா"

மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் 
அது "தியானம்"

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

நம்பிக் கட்டினோம்




மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா??..

 "நம்பிக் கட்டினோம்.. நன்றாக இருக்கிறோம்..."


பவளவிழா வாழ்த்துக்கள் தினத்தந்திக்கு


அன்றிலிருந்து இன்று வரை 
தன் தரத்தை குறைக்காத ஒரே நாளிதழ் 

வடையில இருக்க எண்ணையை சுத்தமா உறிஞ்சிடும்

சென்னையில் மழை

தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் 
தெரிந்த மழை
தொடர்ந்து கொண்டே
இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றிவிடுமோ
என்றே தோன்றுகிறது..

நல்லவன் கெட்டவன்

இந்த உலகத்துல நல்லவன் கெட்டவன்னு எதுமே இல்ல 
இங்க தேவைகள் மட்டும் தான் இருக்கு அதான் உண்மை 
இவங்களுக்கு தேவையானத செஞ்சா நல்லவன்னு சொல்லுவாங்க 
தேவை இல்லாதத  செஞ்சா கெட்டவன்னு சொல்லுவாங்க.
அவங்க தேவை தான் முக்கியம். நாம என்ன செய்றோம்ங்கிறது முக்கியமே இல்ல 


பெண்ணாதிக்க சமூகம்


17 வயதில் கல்விக்கடன் 
30 வயதில் கல்யாணக்கடன் 
40 வயதில் வீட்டுக்கடன் 
50 வயதுக்கு மேல் பெத்தகடன் 
இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை 

சில மாதங்கள் ஒரு உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் சமூகம், ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே  சுமக்கும் ஆணை மறந்துவிடுகிறது 


கல்யாண் ஜுவல்லரி விளம்பரக்கூத்து



என்ன கூட்டம் து?

இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்துபடை திரண்ட கூட்டமா ?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய 
கூட்டமா?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து வெகுண்டெழுந்த கூட்டமா?

இல்லை

கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த 
கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம். இப்படிப்பட்ட மானங்கெட் 
மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்தவாதிகள் வந்தாலும் திருத்த 
முடியாதுஇந்த மண்ணுக்கு உதவாத உதவாக்கறைகளே நீங்கள் எல்லாம் இந்த 
மண்ணின் அவமானங்கள்.


ஊடகங்கள் வாங்கிய கூலிக்கு மேலாகவும் ஒரு மாத காலமாக கூவி கொண்டிருக்கிறார்கள். கல்யாண் ஜுவல்லரி சுதந்திர இந்தியாவின் முதல் நகை கடையா? எதற்கு இத்தனை அடாவடி விளம்பரங்கள் என்று புரியவில்லைகாசை இறைத்து கன்றுக்குட்டியை கூட கழுதையாக விளம்பரம் செய்து விற்று விடலாம் போலிருக்கிறது. ஒரு மக்கள் நல திட்டத்தை எடுத்து சதாகாலமும் நம்மிடையே பேசி விழிப்புணர்வை விதைக்க வேண்டிய சமூக ஊடகங்களும் அமிதாப், பிரபு வகையாறாகளை முன் நிறுத்தி பணம் பார்த்துக் கொள்கிறது. நாளிதழ் முதல் பக்கத்தில் முதற்கொண்டு பத்து நிமிட இடைவெளிகளில் டிவி வரையிலும் இந்த முகங்களை பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது.

அது சரி, இதில் நடிகர்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அவன் வாங்குன காசுக்கு அவன் வேலையை செஞ்சுட்டு போய்ட்டான். இந்த மானங்கெட்ட கூமுட்டை கூட்டத்துக்கு என்ன கெடைச்சுது. நடிப்பும் ஒரு தொழில்ன்னு அவனவன் தன் வேலைய பாத்துட்டு போயிருந்தா இன்னொருதடவ இந்த மாதிரி கூத்து அரங்கேறுமா?

சென்றிடுவோம் எட்டுத்திக்கும்...

"சென்றிடுவோம் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்

பாரதியாரின் இந்த வரிகளை முழுமையாக செயல்படுத்துபவர்கள் நம் தமிழ் சினிமாக்காரர்கள் தான்.  உலக சினிமாக்களை எல்லாம் காப்பி அடித்து தமிழில் புதுபடமாக திரைக்கு கொண்டுவந்து விடுகின்றனர். வேற்று மொழிப் படத்தின் கதையை  மட்டுமல்ல, காட்சிகளை  மட்டுமல்ல, படத்தின் போஸ்டர் உடன் காப்பி அடிக்கிறார்கள்

வேண்டாம்

பணிவில்லா பண்பு வேண்டாம்
பொய்யான உள்ளம் வேண்டாம்
மன்னிக்கா மனம் வேண்டாம்
பகைமையான பாசம் வேண்டாம்
நன்றி இல்லா  நட்பு வேண்டாம்
உதவா உள்ளம் வேண்டாம்
வறுமையான வாழ்வு வேண்டாம்
அடக்கமில்லா அமைதி வேண்டாம்
சமாதானம் இல்லா சமூகம் வேண்டாம் 

மரியா ஷரபோவா - டெண்டுல்கர் யாரு?


ஊடகங்களில் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யார் என தெரியவில்லை என்ற செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. நமது இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு ட்வீட்டர், முகநூல் மற்றும் இதர வலை தளங்களில் மரியா ஷரபோவாவை நாறடித்து விட்டார்கள்.

சச்சினைத் தெரியாது என்று ஷரபோவா கூறியதற்காக திட்டித் தீர்க்கும் நம்மவர்கள் எத்தனை பேருக்கு ரிச்சி மெக்கவா் தெரியும்.. எத்தனை பேருக்கு குவாத் கூப்பரைத் தெரியும்...? இவர்கள் இருவரும் வேறு யாருமல்ல, உலகப் புகழ் பெற்ற ரக்பி வீரர்கள்.. சரி ரக்பி விளையாட்டுப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.. ரக்பி நம்ம நாட்டில் ஆடப்படுகிறதா என்பதாவது தெரியுமா?

அதையெல்லாம் விடுங்க.இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்று எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்.அதற்காக ஹாக்கி ரசிகர்கள் எல்லாம் தெரியாதவர்களைத் திட்டிக் கொண்டா இருக்கிறார்கள்.இல்லையே. இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் யார், இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் யார், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.சரி, அதை விடுவோம்.இந்திய கபடி அணியின் கேப்டன் பெயர் தெரியுமா? இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்? தெரியுமா நமக்கு?

மரிய இருதயம் யார் என தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

கேரம் விளையாட்டில் உலக அளவிலும் தேசிய அளவிலும் பல சாதனைகள் புரிந்த தமிழர். 1995ல் சர்வதேச கேரம் போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவுக்கான உலக சாம்பியன் பட்டத்தை இரு முறை பெற்றுள்ளார். தேசிய சாம்பியன் பட்டத்தை மட்டும் 9 முறை வென்றுள்ளார். 1996ல் மரிய இருதயத்துக்கு இந்திய் அரசு அர்ஜூனா விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. இவர் தற்போது சென்னை பெரியமேடு பகுதியில்தான் வசிக்கிறார்

 இத்தனை சாதனைகள் செய்தும் இவரை யாரும் கண்டு கொள்ளாதது மட்டும் அல்ல, அவரே சொல்வது போல் "ஒன்பது முறை இந்திய சாம்பியன் பட்டம் வாங்கியும் என்னை பற்றி ஒரு பத்திரிக்கையில் கூட துண்டு செய்தி கூட வரவில்லை. சரி, உலக சாம்பியன் பட்டம் பெற்ற பின் அதை எழுதியே தீர்வார்கள் என நினைத்தேன். ஆனால் அதைகூட எந்த பத்திரிக்கையிலும் எழுதவில்லை.."

இவரது மனைவி ஸ்கூட்டரில் பில்லியனில் உட்கார்ந்து வருகையில் லாரி மோதி மரணம் அடைந்தார். கார் ஓட்டும் பொருளாதார நிலையில் எல்லாம் அவர் இல்லை. இந்த நிலையில் தான் இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். நாம் அதனால் மரியா ஷரபோவாவை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை.

நம் நாட்டில் விளையாட்டு ரசிகர்கள் என்றால் அவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட் மாயை இங்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் கிரிக்கெட் வீரர்கள் யாரையாவது இப்படி யாராவது கூறி விட்டால் குமரி முதல் காஷ்மீர் வரை கொந்தளித்து விடுகிறார்கள்.

கிரிக்கெட் எத்தனை நாடுகளில் உள்ளது. விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் டென்னிஸ், கால்பந்து, கூடைப் பந்து இதெல்லாம் கிரிக்கெட்டை விட உலகப் புகழ் பெற்ற விளையாட்டுக் கள். ஏன். கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் கூட சேர்க்க முடியாது என்று கூறி விட்டார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா  கிரி்க்கெட் விளையாட்டின் புகழ் என்னவென்று?
சச்சின் பெரிய கிரிக்கெட் வீரர்தான். சாதனையாளர்தான். சந்தேகமே இல்லை.ஆனால் ரஷ்யாவில் சச்சினைப் பற்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். மதுரை அலங்காநல்லூரில் போய் அங்கிருப்பவரிடம் மரியா ஷரபோவா யாரென்று கேட்டால் அவர் எப்படிச் சொல்வார்?
 
ஷரபோவாவின் ரஷ்யாவில் கிரிக்கெட்டே கிடையாது. அங்கிருப்பவர்களுக்குக் கிரிக்கெட்டையும் தெரியாது. கிரிக்கெட் தெரியாத ஒரு நாட்டுக்காரரிடம் ஏன் சச்சினைத் தெரியாமல்  போய் விட்டது என்று சண்டைக்குப் போய் அவரை அவதூறாக பேசுவது சரியா?

ரஷ்யாவை விடுங்க, கொலம்பியா, அர்ஜென்டினா, உருகுவே, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், தைவான் என உலகின் பெரும்பாலான நாடுகளில் போய்க் கேட்டால் சச்சின் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள். ஆனால் சச்சினைத் தெரியாது என்று சொல்வதில் எந்தத் தவறும் நிச்சயமாக கிடையாது, இது அவருக்கு அவமரியாதையும் அல்ல. மற்ற விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு. அதில் இருப்பவர்களுக்குத்தான் மற்ற கிரிக்கெட் வீரர்களை நன்றாகத் தெரிந்திருக்கும். மாறாக மாரடோனாவிடம் போய் மரிய இருதயம் குறித்துக் கேட்டால் அவர் கடுப்பாகத்தான் பார்ப்பார்.

தெரியாத விளையாட்டைப் பற்றியும், தெரியாத விளையாட்டுக்காரர்களைப் பற்றியும் சம்பந்தமில்லாதவர்களிடம் போய் கேட்டு அவர்கள் சொன்ன பதிலை வைத்து இவ்வளவு  பெரிய சர்ச்சையை ஏற்படுத்துவது நியாயமா!

நாட்டில் சரி செய்ய வேண்டிய / கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் 1000 இருக்க, ஒன்றும் இல்லாத இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பது முறை தானா?
போங்கப்பா போய் வேற வேல இருந்தா பாருங்க, வெட்டியா இருந்தா தான் அடுத்தவன் பிரச்சனைல மூக்க நுளைக்கனும்னு தோணும்.