நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கல்யாண் ஜுவல்லரி விளம்பரக்கூத்து



என்ன கூட்டம் து?

இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்துபடை திரண்ட கூட்டமா ?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய 
கூட்டமா?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து வெகுண்டெழுந்த கூட்டமா?

இல்லை

கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த 
கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம். இப்படிப்பட்ட மானங்கெட் 
மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்தவாதிகள் வந்தாலும் திருத்த 
முடியாதுஇந்த மண்ணுக்கு உதவாத உதவாக்கறைகளே நீங்கள் எல்லாம் இந்த 
மண்ணின் அவமானங்கள்.


ஊடகங்கள் வாங்கிய கூலிக்கு மேலாகவும் ஒரு மாத காலமாக கூவி கொண்டிருக்கிறார்கள். கல்யாண் ஜுவல்லரி சுதந்திர இந்தியாவின் முதல் நகை கடையா? எதற்கு இத்தனை அடாவடி விளம்பரங்கள் என்று புரியவில்லைகாசை இறைத்து கன்றுக்குட்டியை கூட கழுதையாக விளம்பரம் செய்து விற்று விடலாம் போலிருக்கிறது. ஒரு மக்கள் நல திட்டத்தை எடுத்து சதாகாலமும் நம்மிடையே பேசி விழிப்புணர்வை விதைக்க வேண்டிய சமூக ஊடகங்களும் அமிதாப், பிரபு வகையாறாகளை முன் நிறுத்தி பணம் பார்த்துக் கொள்கிறது. நாளிதழ் முதல் பக்கத்தில் முதற்கொண்டு பத்து நிமிட இடைவெளிகளில் டிவி வரையிலும் இந்த முகங்களை பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது.

அது சரி, இதில் நடிகர்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அவன் வாங்குன காசுக்கு அவன் வேலையை செஞ்சுட்டு போய்ட்டான். இந்த மானங்கெட்ட கூமுட்டை கூட்டத்துக்கு என்ன கெடைச்சுது. நடிப்பும் ஒரு தொழில்ன்னு அவனவன் தன் வேலைய பாத்துட்டு போயிருந்தா இன்னொருதடவ இந்த மாதிரி கூத்து அரங்கேறுமா?