பணத்தால் தரை தட்டியது நீதியின் தட்டு
பணமற்றவனுக்கு சிறைக்குள் தட்டு!
நேர்மையாய் இருந்தால் பணியிடை மாற்றம்
நேர்மையற்றவனுக்கு வாழ்கையில் முனேற்றம்!
பணமிருந்தால் மருத்துவமனையில் தரமான சிகிச்சை
பணமற்றவனுக்கு கடமைக்காக ஒரு சிகிச்சை!
வயிற்று பிழைப்புக்கு 50, 100 திருடினால் திருடன்
பலகோடி திருடினால் தலைவன்!
பணமுள்ளவனுக்கு வாய்தா என்ற பெயரில் சுக வாழ்க்கை
பணமற்றவனுக்கு ஜெயிலுக்குள் சோக வாழ்க்கை!
பணமிருந்தால் தரமான கல்வி
பணமற்றவனுக்கு அனுபவமே கல்வி!
நாட்டிற்காக போர்முனையில் உயிரை தொலைக்கிறது ஒரு கூட்டம்
எதிரி என தெரிந்தும் கொஞ்சி உறவாடுகிறது மற்றொரு கூட்டம்!
கற்பழிக்க பட்டவள் மரணத்தின் பிடியில்
கற்பழித்தவன் ஒரு மாதத்தில் ஜாமீனில்!
உண்மையை மக்கள் அறிய சொல்லி ஜெயிலுக்குள் சிலர்
ஜால்ரா அடிப்பதால் அரியணையில் பலர்!
பணம் பேசிய பின்பே திறமைக்கு வாய்ப்பு
இதற்கு பெயர்தான் தற்போதைய தமிழகம்