நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தைக்கு தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள்அந்த உலகை புரிந்து வாழ்வதற்கு ஏற்றவனாக ஒவ்வொரு மனிதனையும் வகுப்பறையில் செதுக்குவது ஆசிரியர் தான். அப்பேற்பட்ட  ஆசிரியர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அவர்களின் உன்னதமான பணியை போற்றும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதியை 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்இவரது நண்பர்களும் மாணாக்கர்களும் இவரது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள்  திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமிதாயார் பெயர் சீதம்மாஇவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்பு இந்நாளை பெயர் மாற்றம் செய்துகுரு உத்சவ்என்று கொண்டாட வேண்டுமென மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுஇதற்கு அதிகமான எதிர்ப்பு தமிழகத்திலிருந்துதான் எழுந்திருக்கிறது. "குரு உத்சவ்' என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்றும் அது "டீச்சர்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் இருப்பதுதான் சரியென்றும் பா..., .தி.மு.., தி.மு.. உள்ளிட்ட கட்சிகள் எதிப்புத் தெரிவிக்கின்றன. 
  • 1993-இல் கொண்டு வரப்பட்ட "பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' (பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்) 
  • 2001-இல் கொண்டு வரப்பட்ட "சர்வ சிக்ஷô அபியான்' (அனைவருக்கும் கல்வித் திட்டம்)
  • 2005-இல் கொண்டு வரப்பட்ட "ஜனனி ஸ்வரக்ஷô யோஜனா' (பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்) 
  • 2007-இல் கொண்டு வரப்பட்ட "ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா' (கிராமப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம்)
  • 2014-இல் பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டிருக்கும், "தன தன் யோஜனா' (மக்கள் - நிதித் திட்டம்) 

ஆகியவை தமிழ் வார்த்தைகளா? அவையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து அழைக்கப்படும் போது "குரு உத்சவ்' ஏன் ஆசிரியர் தினமாக நம்மால் அமைக்கப்பட்டுத் தொடரப்படக் கூடாதாஆங்கிலேயன் 'டீச்சர்ஸ் டே' என்று அழைக்கட்டும், வடநாட்டுக்காரன் 'குரு உத்சவ்' என்று அழைக்கட்டும், தமிழ் நாட்டுக்காரன் 'ஆசிரியர் தினம்'  என்று அழைக்கட்டுமே.

தாய்மொழி எழுதப்படிக்கத் தெரியாத வருங்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடையாளங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவதை விட்டுவிட்டு, தாய்மொழி உயிர்ப்புடன் தொடர நாம் போராட வேண்டிய காலகட்டம் இது. அரசியல் செய்வதென்று முடிவாகி விட்ட பின்பு ஆசிரியர் தினம் மட்டும் என்ன விதிவிலக்கா?