நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தந்தையர் தினம் - ஜூன் 15



தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல, தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இவரது தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கிடையே வழி நடத்தி வந்தார். இதுதான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு ஏற்படுத்தியது.

வாஷிங்டனைச் சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது. மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகாரப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

1913
ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார். மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார். 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை