நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கொல்கத்தா மேயரின் புதிய திட்டம்

நேற்று கொல்கத்தா மேயரான சோவன் சாட்டர்ஜி புதிய திட்டம் ஒன்றை மேயர் கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அதற்கு ஒப்புதலும் பெற்றுள்ளார். அந்த திட்டம் என்னவென்றால் கொல்கத்தாவில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடித்த நிறங்களான வெள்ளை மற்றும் ஊதா நிற பெயிண்ட் அடித்தால் 2014-2015ம் ஆண்டுக்கான சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது தான்.

ஏற்கனவே மேற்கு வங்க தலைநகரில் உள்ள மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடித்த வெள்ளை, நீள நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்கள் நகரின் அழகை அதிகரிக்கும் என்று மம்தா நம்புகிறாராம் 

சொத்து வரியிலிருந்து இப்படியெல்லாம் விலக்கு அளிக்க முடியுமா? அதுவும் ஒரு மாநிலத்தின் மேயருக்கு சொத்து வரி விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
படாத படு பட்டு பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய தன் வீட்டுக்கு என்ன நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பது தனிப்பட்டவரின் விருப்பம்/ உரிமை. அதில் கொல்கத்தா மாநகராட்சி மூக்கை நுழைத்து குறிப்பிட்ட நிற பெயிண்ட்களை தான் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கச் சொல்வது கொஞ்சமும் நியாயம் இல்லை.

என்ன கொடுமையடா இது...

போகிற போக்கில் மம்தாவுக்கு பிடித்த நிறத்தில் தான் உடை அணிய வேண்டும், அவருக்கு பிடித்த உணவைத்தான் அனைவரும் உண்ண வேண்டும், மேலும் அவருக்கு பிடித்த நிறத்தில் தான் உள்ளாடையும் அணிய வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.

வாழ்க பாரதம்