நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மஹாபாரதத்தில் போர் நிகழும்போது, கர்ணணை குந்தி தேவி தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் 'தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன்  இருந்தாலும் சரி, அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு, நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன் என்கிறான். பிற்காலத்தில் இது மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல என்பதாக புரிந்து கொள்ளப்பட்டது.

குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.