நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம். அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும். காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த சுவர்களையே நாடும்.

இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள் இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது. பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகிறவர்கள் தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி பெரியோர்கள் உவமானப்படுத்துக்கிறார்களோ என்னவோ!


குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி