தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட அறிவிப்பு:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட விவரங்களைச்
சேர்ப்பிப்பதற்கான பணி இப்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்க்க விரும்பும் நபர்கள் http://www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்
பட்டியல்களில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம் 6-ல்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள்,
மாநகர பகுதி எனில் மண்டல அலுவலகங்களில் இருந்து பெற்று அளிக்கலாம்.
வட்டாட்சியர்
அலுவலகங்களிலுள்ள தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வருவாய்க்
கோட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும்
நகராட்சி அலுவலகங்களிலுள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் விண்ணப்பங்களைப் பெற
நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளளனர்.
படிவம் 6-உடன் தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
18
முதல் 24 வயதுடையவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் வயதுக்கான சான்றையும்
இணைத்து அளிக்க வேண்டும். விண்ணப்பங்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு வாக்காளர் புகைப்பட
அடையாள அட்டை வழங்கப்படும்.
இதேபோன்று
பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் படிவம்
8-லிலும், பெயர் நீக்கலுக்கான படிவம் 7-லிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
Source: தினமணி