நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

மண் குக்கர்

மண்பாண்ட தயாரிப்புகளில் தமிழகத்தில் பல வகை கலைப்பொருட்கள் தயார் செய்யப் பட்டாலும், தற்போது புதுமையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மண் குக்கர் போன்ற தயாரிப்புகள் குஜராத்தில் நவீனமாக தயார் செய்யப்பட்டு மதுரை கோமதிபுரத்தில் உள்ள "நவதானிய" இயற்கை அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

உரிமையாளர் கஜலெட்சுமி கூறுகையில், 3 லிட்டர் மண் குக்கர், இதில் விசில் வந்ததும் அடுப்பில் தீயை குறைத்து விட வேண்டும். 20 நிமிடங்களில் உணவு தயாராகி விடும்.இதில் பாலும் காய்ச்சலாம் (ரூ.950). அதே போல் சப்பாத்திக்கல், தவா,புல்கா (ரூ.425-ரூ.475). இவற்றை கையாள்வதில் கவனமாக இருக்கவேண்டும்.கீழே விழுந்தால் உடைந்து விடும்

வெள்ளை களிமண் பானையும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.சாதாரண மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தாலே ஜில்லென இருக்கும். அதை விட இந்த வெள்ளை களிமண் பானை மிக விரைவில் தண்ணீரை ஜில்லென மாற்றிவிடும் (10 லிட்டர் பானை ரூ.600). மண்பாண்ட சமையலை விரும்புவோர் இந்த பானைகளை அதிகம் விரும்புகின்றனர்.


தொடர்புக்கு: கஜலெட்சுமி 98431 51352