நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

இடி இடித்தால்...அர்ஜுனா! அர்ஜுனா!


இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.  

அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.  
ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.  
னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். மேலும் அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி