திருமண
அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை
கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
இன்னும் இந்த வழக்கம் சில
கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்ற கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.
குறிப்பு: இந்த பகுதியில்
வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும்,
ஊடகம் வழியாக அறிந்ததும்,
புத்தகங்களின் வழியாக படித்தவை.
இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான
வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால்
உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.