நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அடியாத மாடு படியாது

உழுதல் மற்றும் பாரம் ஏற்றி செல்லும் மாடுகளின் கால்களுக்கு லாடம் கட்டுவது வழக்கம். 1½ மாதங்களுக்கு ஒரு முறை மாடுகளுக்கு லாடம் கட்டப்படுவது வழக்கம். மனிதர்கள் தங்களது பாதங்களை பாதுகாக்க செருப்பு, ஷூ அணிவது போல் மாடுகளின் கால் குளம்புகளை பாதுகாக்கவே லாடம் கட்டப்படுகிறது. அப்படி கால்களுக்கு லாடம் அடிக்காத மாட்டினால் பெரும் சுமைகளை ஏற்றிக்கொண்டு நடக்க முடியாது.அதனால் லாடம் அடியாத மாடு படியாது.

குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி