கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதாவது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பதை உணர்த்துவதாக அப்படி சொல்லப்படுகிறது. இந்த திருமணம் என்ற நிகழ்விற்கு சரியான புரிந்துணர்வு மாப்பிள்ளை வீடு - பெண் வீடு என்ற இரு தரப்பினருக்கும் அவசியம் . எனவே திருமணம் சரியாய் நடை பெறுவதற்கான ஒவ்வொரு செயலிலும் சரியான தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் முறை போயாவது சொல்லி/விளக்கி ஒரு திருமணத்தை நல்ல முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. காலவாக்கில் போய் சொல்லி என்பது பொய் சொல்லி என்றாகி விட்டது. இதுவரை மனஸ்தாபங்களால் இருந்து வந்து கொண்டிருக்கும் உறவுகளிடம் எல்லாம் பல முறை போய் சொல்லி அவர்களையும் திருமணத்தில் சேர்த்துக் கொள்வதற்காக சொல்லப்பட்ட ஒரு வழக்குமொழி என்றும் சில கருத்துகள் நிலவுகிறது
குறிப்பு: இந்த பகுதியில்
வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும்,
ஊடகம் வழியாக அறிந்ததும்,
புத்தகங்களின் வழியாக படித்தவை.
இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான
வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால்
உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.