தற்போதைய காலகட்டத்தில் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது, இதில் சுத்தமான குடிநீரை எப்படி எதிர்பார்ப்பது? இதை பயன்படுத்தி கேன் வாட்டர் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திர உற்பத்தியாளர்கள் நம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வந்து நம் பணத்தை பதம் பார்த்து விடுகின்றனர்.
இப்படி வருந்துபவர்களுக்காத்தன் இந்த தகவல்; ஆம் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். மைசூரில் உள்ள அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள்.
அந்த ஆய்வில் செம்புப் பாத்திரத்தில் 24 மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. கிணற்றிலிருந்து கிடைக்கின்ற தண்ணீர் செம்புக்
குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறி விடுகிறதாம். செம்புக்குடம் இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள் போட்டு வைத்தால் கூட உங்க வீட்டுத்தண்ணீர் தரமானதாக மாறிடும். 3 நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தால் பாசி படிந்த மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள் தான். தகட்டை சுத்தமாக கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள் போட்டு வைக்கலாம். அந்த காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான் இருந்தது. இன்றும் எங்கள் கிராமத்து வீட்டில் செம்புக் குடத்தில் வைத்துத்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதன் உண்மையான காரணம் இப்பொழுதுதான் புரிந்தது.