இந்தப் பழமொழியை கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதாக படிக்க வேண்டும். தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று பெண்ணுக்கு அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி.
குறிப்பு: இந்த பகுதியில்
வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும்,
ஊடகம் வழியாக அறிந்ததும்,
புத்தகங்களின் வழியாக படித்தவை.
இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான
வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால்
உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.