நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்
- லேசான
சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு
வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
- நகங்களில் சொத்தை விழுந்து கருப்பாக காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
- நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.
- விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
- விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
- கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
- கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்
- கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்