நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

பதிவு 9


இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் அவருக்கு உரிய மரியாதை தர வில்லை, பல்வேறு விதத்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார், முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டார், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார், மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்றுஎன்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.

காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.