நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி



ஆடவர் குணங்களாக சொல்லப்படுவது அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி

அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.

நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.

ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்

கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவதுநன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும்நன்மை கடைப்பிடிஎன்கிறது.