சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை பேட்டியில் இயக்குநர் ருத்ரன்...
“யாவரும் நலம் படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது ‘வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார். நான் சந்தித்த அந்த நபர் காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி. நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுமார் 30 வருடங்களாக அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்? அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்”
இதுதான் நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளின் குடும்பங்களின் நிலைமை. என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள்.