நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

பசி வந்திட பத்தும் பறந்து போகும்


அறிவுடைமை
இன்சொல்
ஈகை
தவம்
காதல்
தானம்
தொழில்
கல்வி
குலப்பெருமை 
மானம்  

ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி