நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Why training at GYM

I like this training graph. I realized personally. Yes... its true.
Exercise changed my life...


அஷ்டமி நவமி

அஷ்டமி, நவமி பற்றி பேசும் போது  முன்னோர்கள்  கூறுவர் (கூறப்பட்டது)/ கூறுகிறார்கள் பின்வருமாறு ,

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது, இந்த திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில்  காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையே.

மேலும் அன்றைய தினம் வழக்குகள் போடுதல், போர் தொடுத்தல், அதர்வன வேத பிரயோகம் போன்றவற்றில் ஈடுபட்டால் பலனைத் தரும். பண்டையக் காலப் போர்கள் எல்லாம் அஷ்டமி, நவமி நாட்களில்தான் தொடங்கின  

ஈரான் - ஈராக் போர் அஷ்டமி, நவமி நாளில்தான் துவங்கியது. அமெரிக்கா ஈரான் மீது அஷ்டமி நாளில்தான் முதல் ஏவுகணையை வீசியது. அஷ்டமி நாளில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். முடிவற்று இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். தாக்குதல், பதிலடி தருதல், வீழ்த்துதல், பழி வாங்குதல் போன்ற எண்ணங்கள் அந்த திதிகளில் அதிகரிக்கும்.

அஷ்டமி, நவமி நாட்களில் அதர்வன வேதங்களைப் பயன்படுத்தி செய்பவை எல்லாம் வெற்றி பெறும். அதர்வன வேதங்கள் என்றாலே குருதி தொடர்புடையவை. அஷ்டமி, நவமிக்கும் குருதிக்கும் நிறைய தொடர்பு உண்டு. எனவே அன்றைய தினம் குருதி பரிகாரம், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றிற்கும் அன்றைய திதி ஏற்புடையதாகும்.

உஸ் ஸ் ஸ் ப்ப்பா...முடியல…

இதைப்பற்றி நாம் அறிவியல் பூர்வமாக சிந்தித்தால் என்ன…

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவது நாம் அறிந்ததே. நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும், ஆனால் சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் வைத்து விட்டார்கள். நாமும் அதை மாற்றாமல் அப்பிடியே வைத்துக் கொண்டு விட்டோம், அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.


சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களை சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருப்பதாக என் சிற்றறிவுக்கு தெரியவில்லை.

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

  • வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).
  • மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4நாட்கள்). 
  • பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).  
  • ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்)  
  • தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் (21.75) நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் என்ன செய்வது?



குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

நாடாளுமன்றத்தில் சலுகைகள்


நம்முடைய எம் பிக்களின் வழக்குகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய ஆய்வறிக்கையை ஒழுக்க சீலர்கள் கோடீஸ்வரர்கள் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்.பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன சலுகைகள் கிடைக்கிறது தெரியுமா?

எம்.பிக்களுக்கான சம்பளம் சட்டத்தின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு நமது எம்.பிக்கள் பெரும் சம்பளம் கம்மிதான்.... அரை லட்சம். தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுவது தனி. மேலும்  நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போதோ, அல்லது நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நடக்கும்போதோ அதில் பங்கேற்று கையெழுத்து மட்டும் போட்டால் போதும், அன்றைய நாளுக்கு ரூ.2ஆயிரம் தினப்படியாக வழங்கப்படும். கையெழுத்தை போட்டுவிட்டு காபி குடிக்க போவதாக கூறிவிட்டு நாள் முழுவதும் கட் அடித்தாலும் படிக்கு எந்த பங்கமும் ஏற்படாது.

பணமாக மட்டுமில்லை, பல சலுகைகளையும்  பெறுகிறார்கள். டெல்லியில் ஒதுக்கப்படும் வீட்டுக்கு வாடகை கிடையாது, அந்த வீட்டில் ஆண்டுக்கு 4 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்த அனுமதி இலவசம். விமானம், ரயிலில் இலவச பயணம். மூன்று லேண்ட் லைன் போன்கள், இரு செல்போன் இணைப்புகளுக்கு அனுமதி, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் தொலைபேசி அழைப்புகளை இலவசமாக பேசிக்கொள்ளலாம்

அதுமட்டுமல்ல தங்களது தகவல் தொடர்பு அறிவை வளர்த்துக்கொள்ள, கம்ப்யூட்டர், லேப்டாப், பாம்டாப் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். பில்லை காண்பித்தால், ரூ.2 லட்சத்தை அரசு அளித்துவிடும். ஒரு எம்பிக்கு அதிகபட்சம் ரூ.4 லட்சம் கடனும் அளிக்கப்படுகிறது. ஃபர்னிச்சர்கள் வாங்க ரூ.75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இதில் முக்கியமானது, எம்.பி வீட்டிலுள்ள சோஃபா மற்றும் திரைச்சீலைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவசமாக துவைத்துக் கொடுக்கப்படும்.இக்காரணத்தினால் தான் இந்த மனங்கெட்டஜென்மங்கள் பங்களாக்களையும் மற்ற சலுகைகளையும் விட்டு விட மனமில்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்