சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது நம் உடலில் ரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக ரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கீழே ரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் உடலில் இடுப்புக்குக் கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் ரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம்,, நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன.
குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின் வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.