`பெண் புத்தி பின் புத்தி’
இதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஆம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர்.
ஆய்வு முடிவு விவரம் இதுதான்: ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.
பெண் புத்தியே ’பெரும்’ புத்தி!
குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின் வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.