நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு

இன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியின் நிலைமை குறித்து ஆனந்த விகடன் தலையங்கம்(23-Apr-2015)

விலகினால்... விலக்கப்படுவீர்கள் !

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு. ஆட்சி நிர்வாகத்தின் அத்தனை துறைகளிலும் சுணக்கம். அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே செல்கிறார்கள் என அதிகாரிகளுக்குக்கூடத் தெரியவில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் தீர்ப்பும்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் ஒரே பிரச்னை என்பதைப்போல இருக்கின்றன தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள். சத்துணவு ஊழியர்களின் போராட்டம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், பார்வையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதம என எல்லா திசைகளிலும் போராட்ட அறிவிப்புகளும், கோரிக்கைக் குரல்களும் ஒலிக்கின்றன. கேட்பதற்குத்தான் செவிகள் இல்லை.

ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காக, முடிக்கப்பட்ட பல அரசுத் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கட்டடங்கள், மின் உற்பத்தித் திட்டங்கள்... என அனைத்துத் துறைகளும் அடக்கம். ஆனால், அமைச்சர்களோ, கோயில் கோயிலாகச் சென்று அங்கப்பிரதட்சிணம் செய்கிறார்கள்.அக்கினிச் சட்டி தூக்குகிறர்கள். பால்குடம், பன்னீர்குடம், பறவைக்காவடி, யாகங்கள் என அம்மா பக்தியில் மட்டுமே திளைக்கிறர்கள்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில், கர்நாடகம் அதிவேகமாகச் செல்கிறது. செம்மரக் கடத்தலின் பெயரால் ஆந்திராவில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்று, 104 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 1,500 பேர் ஆந்திரா சிறைகளில் அடைக்கபட்டுள்ளனர். தமிழ்hநட்டின் வாழ்வாதாரம் தொடர்புடைய சட்டப் போராட்டங்களைப் புறந்தள்ளும் தமிழக அமைச்சரவை, சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டுமே தனது மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறது.

தலைமைச் செயலகம் முதல் கடைநிலை கிராமப் பஞ்சாயத்து வரை 'முதலமைச்சர்' என்ற இடத்தில் ஜெயலலிதாவின் புகைப்படமே இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. திரை அரங்குகளில் ஒளிப்பரப்படும் அரசின் விளம்பப் படங்களில் 'மக்களின் முதல்வர்' என்ற பாவனை கூட இல்லை. நேரடியாக 'முதல்வர் ஜெயலலிதா' என்றே சொல்கின்றனர். இது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் அசிங்கம். கோடிக் கணக்கான ஏழைகள் வாழும் நாடு இது. அரசின் திட்டங்களை நம்பி, பசித்த வயிறுகள் காத்திருக்கின்றன. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் ஏறி இறங்குகின்றனர். தன்னில் இருந்து விலகிச் செல்லும் அரசாங்கத்தை, மக்கள் நிரந்தரமாக விலக்கி வைத்துவிடுவார்கள்.

அடுத்த தேர்தல் வரப்போவது தெரியும் தானே !


பேமிலி மேன்

கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக்கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின்பாக பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் "பேய்" முழி முழிக்கும்
மேனை தான் "பேய் முழி மேன்" "பேய் முழி மேன்" என்கிறோம்.
இதுவே காலப்போக்கில் மருவி பேமிலி மேன் ஆனது.

நல்லவன் கெட்டவன்

இந்த உலகத்துல நல்லவன் கெட்டவன்னு எதுமே இல்ல 
இங்க தேவைகள் மட்டும் தான் இருக்கு அதான் உண்மை 
இவங்களுக்கு தேவையானத செஞ்சா நல்லவன்னு சொல்லுவாங்க 
தேவை இல்லாதத  செஞ்சா கெட்டவன்னு சொல்லுவாங்க.
அவங்க தேவை தான் முக்கியம். நாம என்ன செய்றோம்ங்கிறது முக்கியமே இல்ல 


பயன் இல்லை இவ்வேழும்


ஆபத்துக்கு உதவாத நண்பன் 
அரும்பசிக்கு உதவாத அன்னம் 
தரித்திரம் அறியாத பெண்டிர் 
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர் 
கோபத்தை அடக்காத வேந்தன் 
குருமொழி கேளாத சீடன் 
பெற்றோருக்கு அடங்காத பிள்ளை 
பயன் ஏதும் இல்லை இவ்வேழும் மெய்யே 


பெண்ணாதிக்க சமூகம்


17 வயதில் கல்விக்கடன் 
30 வயதில் கல்யாணக்கடன் 
40 வயதில் வீட்டுக்கடன் 
50 வயதுக்கு மேல் பெத்தகடன் 
இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை 

சில மாதங்கள் ஒரு உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் சமூகம், ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே  சுமக்கும் ஆணை மறந்துவிடுகிறது 


தியானம்...லிப்ட்ல்!

முன்பின் தெரியாதவர்களுடன் லிப்ட்ல் பயணிப்பது சில நிமிட தியானம் போன்றது. ஒரு  அருமையான நிசப்தம் 

அறச்சீற்றம்

வேலை செய்ய வேண்டி இருந்தால்,அரசு ஊழியர்களுக்கு ஒரு கோபம் வரும் பாருங்கள், அந்த அறச்சீற்றத்துக்கு  ஈடு இணை வேற எதுவும் இல்லை.

கல்யாண் ஜுவல்லரி விளம்பரக்கூத்து



என்ன கூட்டம் து?

இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்துபடை திரண்ட கூட்டமா ?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய 
கூட்டமா?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து வெகுண்டெழுந்த கூட்டமா?

இல்லை

கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த 
கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம். இப்படிப்பட்ட மானங்கெட் 
மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்தவாதிகள் வந்தாலும் திருத்த 
முடியாதுஇந்த மண்ணுக்கு உதவாத உதவாக்கறைகளே நீங்கள் எல்லாம் இந்த 
மண்ணின் அவமானங்கள்.


ஊடகங்கள் வாங்கிய கூலிக்கு மேலாகவும் ஒரு மாத காலமாக கூவி கொண்டிருக்கிறார்கள். கல்யாண் ஜுவல்லரி சுதந்திர இந்தியாவின் முதல் நகை கடையா? எதற்கு இத்தனை அடாவடி விளம்பரங்கள் என்று புரியவில்லைகாசை இறைத்து கன்றுக்குட்டியை கூட கழுதையாக விளம்பரம் செய்து விற்று விடலாம் போலிருக்கிறது. ஒரு மக்கள் நல திட்டத்தை எடுத்து சதாகாலமும் நம்மிடையே பேசி விழிப்புணர்வை விதைக்க வேண்டிய சமூக ஊடகங்களும் அமிதாப், பிரபு வகையாறாகளை முன் நிறுத்தி பணம் பார்த்துக் கொள்கிறது. நாளிதழ் முதல் பக்கத்தில் முதற்கொண்டு பத்து நிமிட இடைவெளிகளில் டிவி வரையிலும் இந்த முகங்களை பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது.

அது சரி, இதில் நடிகர்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அவன் வாங்குன காசுக்கு அவன் வேலையை செஞ்சுட்டு போய்ட்டான். இந்த மானங்கெட்ட கூமுட்டை கூட்டத்துக்கு என்ன கெடைச்சுது. நடிப்பும் ஒரு தொழில்ன்னு அவனவன் தன் வேலைய பாத்துட்டு போயிருந்தா இன்னொருதடவ இந்த மாதிரி கூத்து அரங்கேறுமா?