நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

Dare to Dream...

It all depends on what you believe.....

Do U Dare to Dream?

 

please use the below link, if you cannot able to view the video
http://www.youtube.com/watch?v=VoVDWdY018w



அண்ணாவின் அறிவுக்கனிகள் நூலில் இருந்து...


 

 முன்னால் முதல்வர் அண்ணாதுரை கூறுகிறார்:

'நம் நாட்டில் எல்லாம் உள்ளது .நம் அதர்வண வேதத்தில் இருந்துதான் ஜெர்மானியன் பறக்கும் குண்டு, ஆகாயவிமானம் முதலியவற்றை தெரிந்துகொண்டான்.நம் நாட்டில் இல்லாத விமானமா...என்னென்ன அஸ்திரங்கள் இருந்தன. அக்னியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என்று! இன்று என்ன புதுமையாய் வந்து விட்டது' என்று நாட்டை பற்றி பெருமையோடு பேசுகின்றனர். ஆனால் அந்தப் பழம்பெருமை எங்கே இப்போது? அந்நியனுக்கு நாட்டை கொடுத்து விட்டு, ஆந்தை போல் விழிப்பது ஏன்? இதனால், நமக்கு பெருமை இல்லை சிறுமை தான்.

இது அந்நியனுடன் கொஞ்சிக் குலாவும் அழகிய நங்கையைக்  கண்டு, அருகில் இருப்பவரிடம், 'இவள் யாரோ என்று எண்ணாதேயும்; இவள் என்னுடைய மனைவியாக இருந்தவள் தான்.இப்போது, இவளை, அவன் ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டான். ஆனாலும், என்னிடம் இருந்தவள் தானே...இதனால், எனக்கு எவ்வளவு பெருமை! என்று கூறுவதற்கு சமமாகும்!

-அண்ணாவின் அறிவுக்கனிகள் நூலில் இருந்து முல்லை முத்தையா

vCenter Heart Beat 6.4.1 deployment


Step by Step deployment of VMware vCenter Heart Beat 6.4.1

வருத்தம்

உடைக்கபடுகிறது
எங்கள் முதுகெலும்பு
ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்கள்
எச்சி ருசிக்க....

துர்நாற்றம் வீசும்
தெரு கழிவுகளை
அள்ளி போக
வக்கில்லாத அரசு
வக்கணையாக பேசுகிறது
"அணுகழிவுகளை பாதுகாப்போம்"

நதிகளில்
சாக்காடை கலப்பு...
ஏரி குளமெல்லாம்
அரசு வளாகம்.....
மழைநீர் சேகரிக்கும்
திட்டமில்லை.....
தண்ணீர் தட்டுபாடு
உடனே தனியார்மயம்
இனி
பன்னாட்டு நிறுவனம்
பருக கொடுக்கும்
மூத்திரம்தான்
குடிநீர் நமக்கு.....

சந்தேகத்தின் அடிப்படையில்
கைதான என் அப்பா
காயப்பட்டு துடிக்கிறார்
காவல் நிலைய வாசலில்..

கோடி கோடியாக
ஊழல் செய்தவனுக்கு
என்ன மரியாதை....?
எத்தனை சலுகைகள்...?
எத்தனை உபசரிப்பு...?

சட்டத்தின் முன் எல்லோரும்
சமம் என்பதில்
எங்களுக்கு துளியும்
சம்மதமில்லை.

கனிமவளம் என்று சொல்லி
கற்பழிக்கிறது உன் ராணுவம்
எதிர்த்து கேள்வி கேட்டால்
எழவெடுத்த உன் சட்டத்தில்
நான் பயங்கரவாதி...

சமவெளிக்கு பழகாத
பழங்குடிகளை
பலவந்தமாக இழுத்து வந்து
மது புட்டியோடு வரும்
சுற்றுலா பயணிகளை
அனுப்புகிறது
வனத்துறை
பல்லுயிரியம் பாதுகாப்பு கருதி..

சந்தனம் தேக்கு நிறைத்து
விருந்தினர் பங்களா வளர்கிறது
காப்பு காடுகளில்
எங்கள் மூதாதையர்
மூங்கில் வீடுகளை
பிய்த்தெறிந்து....

தன் வயிறு வற்றியபோதும்
மார்பை பிழிந்து
என் வாயில்
பாலை சுரந்த
உழவன் உயிர் மாய்த்து கொள்கிறான்
உனக்கு
தொப்பை கொழுத்த
தொழிலதிபதி
வயிறு வெடித்திடுமென்ற
வருத்தம்.

தொழிற்சாலை கட்டிடம் கட்ட
எங்கள் நிலம் புகுந்து
விரட்டியடிக்கிறது
பாதுகாப்பு பணி...
சீன ஊடுருவலை
அத்துமீறல் என
கத்துகிறாய்....
என்னடா நியாம் ?

ஒரு வெள்ளைகார
பல்பொருள் அங்காடி மாளிகை
திறப்பு விழா....
சாலையோரம் கடை விரிக்கும்
என் சகோதரனை அடித்து நொறுக்கிறாய் ?
யாருக்குடா சுதந்திரம்....

எங்கள் உடலெங்கும்
லத்தி ஓவியம்
வரி வரியா...

எங்கள் முதுகுத்தோல்
உனகென்ன
மிதியடியா....?

பன்னாட்டு பன்றிகள்
வீசியெறியும் கழிவுகளை
கவ்வி தின்னும்
உன் குடும்பத்தை தவிர
இந்த தேசத்தில்
அனைவரும் அகதியே....

பலமுறை கைகழுவி
கரைபட கரைபட
வெட்கமின்றி சொல்லுகிறாய்
"நாங்கள் சுத்தமான
தங்கக்கட்டி"

பன்னெடுங்காலமாய்
உன்னை பார்த்து கொண்டிருக்கும்
நான் சொல்கிறேன்...

இந்தியா
பன்னாட்டு நிறுவனங்கள்
எச்சில் துப்புமொரு
குப்பை தொட்டி...

----- தமிழ்தாசன்----

Installing ESXi 4.1 & 5.0

Click the following links providing you the complete installation of
 ESXi 4.1 and  ESXi 5



வருத்தம்

அன்பு மக்களே,
தயவு செய்து விழியுங்கள், இன்னும் என்ன செய்தால் விழிப்பீர்கள்,
01. தண்ணீர் தனியார்மயம் ஆக்கியாகிவிட்டது...
02. அணைகள் அனைத்தும் நமக்கெதிராக மூடியாகிவிட்டது.
03. பல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அணு உலை தொடங்கப்படப் போகிறது.
04. காஸ் பைப்லைன் விவசாயிகளின் வயற்றில் அடித்து வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது...!
05. மீனவன் கொலை செய்யப்படுகிறான்,
௦6. இந்தியமும், உலகமும் நம்மை ஒட்டு மொத்தமாக கைவிட்டு விட்டது.
௦7. சிங்களன் இன்னமும் அங்கே தமிழ் மக்களை சீரழிக்கிறான், உறுப்புகள், உரிமைகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.!

என்ன மிதப்பில் இருக்கின்றீகள் தைரியமாய்....
தொலைக்காட்சி, ஊடகம் அனைத்தும் காட்டுவதை
நம்பும் கையாலாகாத, நிலைக்கெட்ட மாந்தராய் எத்தனை நாள் இருக்க போகிறோம்.
நீ என்ன பார்க்க வேண்டும்], நினைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக
இன்று நீ வளர்த்து விட்ட ஊடகங்கள் உள்ளன,

நீ பார்த்து வளர்த்துவிட்ட கூத்தாடிகள் இன்று அதன் பாடல்களில் உனக்கு அறிவுரை கூறுகிறது.
உனக்கு என்றால் வாய்மூடி, மெய்மூடி நிற்கிறது..

--
வளர்ச்சி என்ற பெயரில் இங்கே உருவாக்கப்படும் அனைத்தும்
உன்னையும்
உன் உழைப்பையும்
உன் ஆரோகியத்தையும்
உன் நாட்டின் வளத்தை சுரண்டியும் அவர்கள் பயன்பெற துவக்கப்படுவதுதான் காரணம்
வெளிநாடு செல்வேன் எனக் கூறினால், அங்கே உன் மீது கைவைத்தால் கேட்க நாதிக் கிடையாது...!
--

இதையெல்லாம் கூறினால் போராளி, முட்டாள் எனக் கூறுவதை நிறுத்துங்கள்.
திருந்துங்கள்... ! உங்கள் குருட்டு புத்தியால், தெளிவாய் இருப்பவனை குறைக் கூறாதீர்கள்...
இவர்களால் தான் இன்னும் நீங்கள் நிம்மதியாய் இருகின்றீர்கள் என்பதை மறுக்காதீர்கள்...!
நானும் ஆரம்பம் முதல் பார்த்துவிட்டேன்,
தமிழனுக்குத் தான்: ஏத்தனை துரோகங்கள், வலிகள், துரோகிகள்...!
எங்களை முன்னேற விடுங்கள்
உங்கள் தமிழ் இளைஞர்களை, கை கொடுங்கள், தோல் கொடுங்கள் ...!
எங்கள் தூக்கம், திறமைகள், கனவுகள் அனைத்தும் உங்கள் மெத்தனத்தால் களவாடப்படுகிறது...!
இன்று உன் எதிர்காலத்தை தீர்மானிக்கப்படாமல் விட்டால்.. நாளை எதிர்காலம் இல்லை...
அதுவும் மிகத்தொலைவில் இல்லை.
இன்னும் இரண்டு வருடம் போதும்..
இதை தமிழனை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அறிந்தவனுக்கு நன்று தெரியும்..

=========
நன்றி -குகன் தாஸ்