நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

வாழ்த்துக்கள்...

செஸ் விளையாட்டில் நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த மாதம் IPL கிரிக்கெட் போட்டி நடந்தது அனைவரும் அறிந்தது, இதை போட்டி என்று சொல்வதை விட திருவிழா என்று சொன்னால் சரியாக இருக்கும். பண பலம் கொண்ட மேல்தட்டு மக்கள் தங்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த கிரிக்கெட் விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டார்கள். இந்த விளையாட்டிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திரிக்கிறோம், தொலைக்காட்சியில் எவ்வளவு விளம்பரம், குளிர்பானங்களில் விளம்பரம், செய்திதாள்கலிலும் விளம்பரம், இதையெல்லாம் பார்க்கும் போது வருங்கால தலைமுறைக்கு நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது மாறி கிரிக்கெட் என்று ஆனாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

இதில் match fixing வேறு, அதாவது வெற்றியை முன்கூட்டியே நிர்ணயம் செய்தல். இப்படி fixing செய்து ஆடி ICC ஆல் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள்! தான் இன்று நம் முன்னே மீடியாக்களில் தோன்றி நடக்க போகும் விளையாட்டை பற்றிய தங்களின் அனுமானத்தை சொல்கிறார்கள். நம்முடைய வரிபணத்தை கொடுத்து உன் திறமையை வளர்த்து நம் நாட்டிற்க்கு பெருமை சேர் என்று அனுப்பினால் இவர்கள் அங்கேயும் பணம் வாங்கிகொண்டு இத்துணை இந்தியர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் சுயநலத்துடன் நடந்துகொண்டவர்களுக்கு நாம் என்ன தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றால், பாராளுமன்றத்துக்கு தெரிந்தெடுத்து அங்கே MP ஆஹா அமரவைத்திருகிறோம் மற்றும் மீடியாக்களில் வந்து விளையாட்டின் போக்கு எப்படி இருக்கும் என்று அவரிடமே வினவிக்கொண்டு அதை பார்த்து ரசித்துக்கொண்டிருகிறோம்.

இதை எல்லாம் தாண்டி ஒரு ஆண்டில் நம் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி நாமும் கிரிக்கெட் விளையாட்டில் அனைவருக்கும் நிகர் என்று நம் வீரர்கள் எத்துனை முறை சாதித்தார்கள் என்றால் சற்றே யோசிக்க தோன்றுகிறது. சரி அப்பிடியே விளையாடி ஒரு கோப்பை அல்லது பரிசுடன் தாயகம் திரும்பும் வீரர்களுக்கு இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் பட்டாசுகள் கொளுத்தி, உற்சாக வரவேற்புடன் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படுகிறது.

ஆனால் செஸ் விளையாட்டில் நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியர். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் பிறந்து, வளர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, தமிழகத்தில் விளையாடத் தொடங்கி, அகில இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்து, இப்போது உலக அளவில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் பெரும் மகிழ்ச்சிக்குரல்கள் கேட்கவில்லை. அவரது வெற்றி வெறும் செய்தியாக வெளியானதே தவிர, பெருந்திரள் உணர்வின் கொண்டாட்டமாக மாறவில்லை.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால்,அயர்லாந்து எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தூசிப் படலத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயினிலிருந்து பல்கேரியாவுக்கு சுமார் 40 மணி நேரம் சாலை வழியாகப் பயணம் செய்து, போட்டி நடைபெறும் சோஃபியா நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தனது முதல் ஆட்டத்தை எதிர்ஆட்டக்காரர் டெபலோவிடம் இழந்தார். இந்தச் சோர்வுத் தோல்வி அவரை வீழ்த்திவிடும் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், இந்தப் பயணத்தை அவர் தவிர்த்துவிட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றியிருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்த வேளையில், 11 வது ஆட்டத்தின் முடிவு வரை இருவரும் சமமான புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், 12 வது ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது உலக சாம்பியன் பட்டத்தை நிலை நிறுத்திக் கொண்டதைப் போன்ற பரபரப்பு, எந்தவொரு விளையாட்டுக்கும் குறைவில்லாதது.

இருப்பினும்கூட, ஆனந்த் அடைந்த வெற்றி செய்தியானதே தவிர, மக்களின் கொண்டாட்டமாக மாறவில்லை. இதற்குக் காரணம், மீடியாக்கள் இந்த விளையாட்டுக்கு ஒரு செய்திக்கான முக்கியத்துவம் மட்டுமே அளிக்கின்றன என்பதும், கிரிக்கெட் ஆட்டத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தொலைக்காட்சி நிறுவனங்களோ அல்லது விளம்பர நிறுவனங்களோ செஸ் போட்டிக்கு அளிப்பதே இல்லை என்பதுதான். இதனால், இந்த விளையாட்டில் இளைய தலைமுறை ஆர்வம் இழந்தது.

செஸ் விளையாட்டுக்கு அதிக செலவு இல்லை. பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கற்றுக் கொண்டால், பல புதிர்களுக்குத் தீர்வு காணும் நகர்வுகளை தானே ஒருவர் தனித்து விளையாடவும் முடியும். பெரிய மைதானமும் தேவை இல்லை. ஆனாலும் பள்ளிகள் இதுபற்றி அக்கறை கொள்வதில்லை.

சிந்திப்போம்...