எனக்கும் நல்லது நடக்கும்,என்னுடைய தேவைகளும் கோரிக்கைகளும் இந்த நாடாளும் பிரதமற்கு நம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியால் (MLA/MP) அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஓட்டு போட்ட ஏமாளி பாமரன்களில் நானும் ஒருவன்.
கடந்த வாரம் வலையில் படித்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய செய்தி மீண்டும் நம்முடைய எமாளிதனத்தை நினைவுபடுத்தியது.
அந்த காலத்தில்( தோரயமாக ஒரு 45 வருடங்கள்), நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போது நாள்தவறாமல் வந்தமர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் ராம் மனோகர் லோகியா, ஆச்சாரிய கிருபளானி, என்.ஜி. கோரே, மது லிமயே, மது தண்டவதே, என்.ஜி. ரங்கா, மினு மசானி, எஸ்.ஏ. டாங்கே, பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், பூபேஷ் குப்தா, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் அமர்ந்திருந்தனர்.
எந்தவொரு பிரச்னையிலும் காரசாரமான விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், அரசின் செயல்முறைகளைத் துளைத்தெடுக்கும் கேள்விக்கணைகள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது தவறாமல் வந்தமர்ந்து விடுவாராம் பண்டித நேரு. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அரசுத் தரப்பில் விளக்கங்கள் போதவில்லை என்று கருதினால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் நேரு தலை வணங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். நல்லாட்சியை ஆளும் தரப்பும் எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து உறுதிப்படுத்துவது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளம் என்று பிரதமர் நேருவே பல தடவை தனது நாடாளுமன்ற உரைகளில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா MP களின் வருகை பதிவேட்டை பார்த்தால் இவர்கள் நமக்காக நம் தொகுதிக்காக எவ்வளவு நேரம் ஒதிக்கிஇருகிறார்கள் என்பது தெரியும். இதில் நமக்காக கலைசேவையில் ஈடுபட்ட கலாச்சார காவலர்களாகிய முன்னால் நடிகைகளின் வருகை குறிப்பிடத்தக்கது .
செய்தியை அறிய இங்கே சொடுக்கி படிக்கவும்.
இது ஒரு புறம் இருக்க நமது மத்திய ரசாயணத்துறை அமைச்சர் திரு.மு.க.அழகிரி அங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று நமக்குத்தான் தெரியவில்லை என்று பார்த்தால் அங்கிருக்கும் அமைச்சரவை சஹாக்களுக்கும் தெரியவில்லை.
செய்தியை அறிய இங்கே சொடுக்கி படிக்கவும். சரி அவர் எங்கே என்று கேட்டால் இங்கே
இங்கே என்கிறார்கள்.
நமது எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் இருப்பதுகூட மன்னிக்கப்படலாம். அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. எதிர்க்கட்சிகளைச் சமாதானப்படுத்தி அரவணைத்துச் செல்வதும், முறையான விவாதங்களுக்கு வழிகோலுவதும்தானே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் பொறுப்பு.
எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களைச் சாதகமாக்கி விவாதமில்லாமல் தனது மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணம் வகுப்பதுடன், நாடாளுமன்ற நடைமுறையின் நியாயத்தையே கேலிப்பொருளாக்கும் செயல். தேவையில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது சேது திரைப்படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள்.
-முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்சர்ச்சில்
நன்றி : thatstamil