01.கோழி, புறா, பசு மூன்று அவர் விரும்பியவை `டேய்’ என்பார் கோழியை. `வாம்மா’ என்பார் சேவலை `வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும்' என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்!
02. யார் பேசும்போது மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப்படுத்தபடியேதான் எழுதுவார்!
03. 'உங்களுக்கு எல்லாம் தமிழை
நான்
வாரிக்
கொடுகிறேன்.
எனக்கெல்லாம்
தமிழை
வாரிக்
கொடுப்பவர்
பாரதிதாசன்’ என்று பாராட்டியவர் கிருபானந்த
வாரியார்.
ஆத்திகர்களையும்
தனது
கொஞ்சு
தமிழால்
ஈர்த்த
நாத்திகர்!
04. புதுச்சேரியில் ஒரு முறை புயல் சுழன்றடித்தபோது
இவரை
ஐந்து
கிலோ
மீட்டர்
தூரத்துக்குத்
தூக்கி
எறிந்தது
சூறாவளி.
ஒரு
முழு
நாள்
கழித்து
வீட்டைத்
தேடிக்
கண்டு
பிடித்து
வந்தார்.
அவரது
`பறந்து
திரிந்த’ அனுபவங்களைக் `காற்றும்
கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார்
பாரதியார்.
அந்தக்
கதையை
மறுபடி
மறுபடி
சொல்லிக்
கேட்டவர்
அரவிந்தர்!
05. நாடு முழுவதும் நிதி
திரட்டி
25 ஆயிரம்
ரூபாயை
இவருக்கு
வழங்கினார்
அண்ணா.
`நான்
கொடுக்க
நீங்கள்
வாங்கக்
கூடாது’ என்ற அண்ணா. அந்தப் பணத்தைக்
கையில்
ஏந்தி
நிற்க...
பாரதிதாசன்
எடுத்துக்கொண்டார்!
06. ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய
மாடசாமி
புதுச்சேரி
வந்தபோது,
அவரை
போலீஸீக்குத்
தெரியாமல்
கட்டுமரத்தில்
ஏற்றி,
நடுக்கடல்
வரை
கொண்டு
சென்று
வெளிநாட்டுக்கு
அனுப்பிவைத்த
அஞ்சாமைக்குச்
சொந்தக்காரர்!
07. எப்போதும் பச்சை சால்வைதான் அணிவார்.
அதற்குள்
ஒரு
கத்தியும்
ஒரு
வாளும்
வைத்திருப்பார்.
இரவில்
எங்கு
சென்றாலும்
அதை
மறக்காமல்
எடுத்துச்
செல்வார்!
08. புதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக்
கூடத்தில்
சிலம்பம்
கற்றார்.
குத்துச்சண்டையும்
குஸ்தியும்
தெரியும்.
அதற்காகவே
உடும்புக்
கறியை
அதிகமாகச்
சாப்பிட்டார்.
`உடல்
நலனைப்
பேணுதலே
அனைத்துக்கும்
அடிப்படை’ என்பார்!
09. `சுப்புரத்தினம் எனக்காக ஒரு
பாட்டு
எழுதேன்’ என்று பாரதியார் கேட்டுக்
கொண்டதும்
இவர்
எழுதிய
பாட்டுதான்,
`எங்கெங்கு
காணினும்
சக்தியடா!’
10. பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள்
இருந்தார்.
அவரை
நிம்மதியாக
ஓர்
இடத்தில்
பணியாற்றிவிடாமல்
15 பள்ளிகளுக்கு
மாற்றிக்கொண்டே
இருந்தார்கள்,
`அரசியல்
ஈடுபாடு
இல்லாமல்
இருந்தால்
என்னை
மாற்ற
மாட்டார்களாம்.
அரசியல்
இல்லாமல்
என்னால்
எப்படி
இருக்க
முடியும்?’ என்று கொதித்தார்!’