நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

முல்லை பெரியாறு அணையின் உண்மை கதை


இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவிலோ அல்லது சோமாலியாவிலோ  எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியாறு  அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருந்த மக்களுக்கு உணவளிக்க முடியாததால் ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா, மொரீசியஸ் என பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது. இத்தகைய பஞ்சத்தால்  மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பொறியாளர் கர்னல் பென்னி குயிக், அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போதும்  கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினார்.


முல்லை பெரியார் அணையின் உண்மை கதை அறிய இங்கே சொடுக்கவும்.



வருத்தம்

இன்று தினமணி நாளிதழில் படித்த செய்தி ,தனியார் காவலாளிகளின் ஊதியத்தை ரூ. 12 ஆயிரமாக நிர்ணயிக்க கோரிக்கை.

"அதில் மாநிலத்தில் உள்ள 10 லட்சம் தனியார் காவலர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில்  பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு அரசு மாத ஊதியத்தை ரூ. 12 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என தனியார் காவலாளி சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது"

இதை படிக்கும் பொழுது, தனியார் காவலாளிகலுக் கென்று ஒரு சங்கம் வைத்து, அதில் அவர்களுக்கான தேவையை முறையான விதத்தில் அரசுக்கு விளக்கி, பின் தங்கிய சமூகத்தில் உள்ளவர்களை உயர்த்தும் நோக்கில் செயல்படுவது ஒரு மகிழ்ச்சி.

அதே சமயத்தில் தங்களை மெத்தப்படித்தவர்கள் என்றும், ஒரு நாட்டின் பொருளாதார சந்தையை நிர்ணயிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் எனவும் முன்னிறுத்தும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஒரு சங்கமும் இல்லை. சங்கங்கள் ஏற்படுத்த அந்தந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விடுவதில்லை.

அடிமைத்தனத்தின் இன்னொரு (மிகப்பெரிய) சாயல் தகவல் தொழில்நுட்பத்துறை.

இனி இந்தியாவில் எவனும் "சுதந்திர இந்தியன்" என்று சொல்லவே கூடாது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம்



சும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை பறந்து, அங்கிருந்து பசும்பொன்னுக்கு ஹெலிகாப்டரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய்.

இது .தி.மு. சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இன்னபிற செலவீனங்களையும் (சுயலாப செலவுகளையெல்லாம்சேர்த்து பொது கணக்கில் சேர்த்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு புரயோஜனம் இல்லை இதனால்அதான் அரசுக்கு இது போன்ற செலவு செய்ய நம்மை போன்ற சாமானியர்கள் கட்டும் வரி என்ற ஒன்று உள்ளதே.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த கவசத்துக்கு.
அமைச்சர் . பன்னீர்செல்வம், மற்ற அமைச்சர்கள் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தரப்பைச் சேர்ந்த முக்கிய உறவினர்கள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பழனி, சரவணன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, முதல்கட்டமாக தங்கக் கவசங்களைப் பாதுகாக்க தேவர் நினைவிடத்தில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு முதல்வர் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.
 
அதன்படி தென் மண்டல போலீஸ் .ஜி. அபய்குமார் சிங், ராமநாதபுரம் சரக டி..ஜி. (பொறுப்பு) அனந்த குமார் சோமானி ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில்வாகனன், கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் ஆகியோர் தினசரி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர் 10 துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீஸார் தேவர் நினைவிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர், தலா 2 மணி நேரம், நினைவிடத்தில் உள்ள சிலை அருகிலும் மற்றும் நினைவிட அறைக்கு வெளி வளாகத்திலும் துப்பாக்கியுடன் பணியில் ஞாயிற்றுக்கிழமை பகல் முதல் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை உதவி கண்காணிப்பாளர் தினசரி காலை, பகல், மாலை, இரவு வேளைகளில் சென்று கண்காணித்து வருகிறார்.


இதற்கிடையில், கமுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட 2 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் சிறப்பு பாதுகாப்பு பெட்டகம் அமைத்து, அதற்குள் தங்கக் கவசங்களை பாதுகாக்க அதிமுக நிர்வாகத்தினரும், தேவர் நினைவாலய பொறுப்பாளர் தரப்பினரும் விரைவில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி அமைச்சர் . பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். பாதுகாப்பு பெட்டக சாவியை யார் பொறுப்பில் வைத்திருப்பது என்று முதல்வரின் கருத்துக்கேற்ப தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருக்கும் பிரச்னை போதாது என்று இது வேறு.

ஏற்கெனவே பழனி நவபாஷான சிலையை சுரண்டிவிட்டார்கள்; திருச்செந்தூர் முருகனின் தங்கவேலைத் திருடி விட்டார்கள் என்று ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதையே இன்னும் கண்டுபிடித்தப் பாட்டைக் காணோம். இப்போது இதுவேறு. கவசத்தை சுரண்டிவிட்டார்கள், வளைத்துவிட்டார்கள் என்று வரும் ஆண்டுகளில் எவனாவது ஏழரையைக் கூட்டி அது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும் சாத்தியங்கள் அதிகம்.
இத்தகைய சில்லறைப் பிரச்சினைகளே மாபெரும் கலவரங்களை தூண்டிவிடும் என்பதிலிருந்தே அரசும், கட்சிகளும் சாதி சார்பாக இருக்க கூடாது என்பதை புரியவைத்துவிடும். இந்த கவசத்தை யாருடைய கோரிக்கையின் பெயரால் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்பது முக்கியமானது. 2010-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா பசும்பொன் சென்றபோது அங்கு வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்தாராம் அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.

ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு சிலைகளெல்லாம் இரும்புக் கூண்டிற்குள் பூட்டப்பட்டு போலீசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலையை அவமதித்து விட்டார்கள் என்று அன்றாடம் ஒரு கலவரம் நடக்கும் போது தங்க சிலை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாளைக்கு போட்டியாக மற்ற தலைவர்களுக்கு பிளாட்டினக் கவசம், வைர அங்கி, அதற்கு வசூல், கோரிக்கை, அரசு, கட்சிகள் ஏற்பு, பின்னர் அதைக் காணோம் என்று கிளப்பினால் தமிழக அரசின் ஒரே செயல்பாடாக சிலை பாதுகாப்பு பணி ஆகிவிடாதா?

இதே நாளில் கம்பம் பகுதியில் வயல்களில் நடவுப் பணிகள், நெல் சாகுபடி பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல் முல்லை பெரியாற்றிலிருந்து திறந்து விட வேண்டிய நீரை கேரள அரசு தர மறுத்து வரும் நிலையில் இப்பகுதி மக்களின் விவசாயம் கேள்விக்குறியதாகியுள்ளது. நெற்பயிர்களைக் காக்க லாரிகளில் நீர் கொண்டுவந்து குடங்கள் மூலமாக பயிர்களில் தெளிகபடுகிறது. 


நெற்பயிர்களைக் காக்க முல்லை பெரியாறு தண்ணீர் வழங்க கோரி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, 


"முல்லை பெரியாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 111 ஆடி. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் 17 வாய்க்கால்களில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெல் நடவு நட்டு கம்பம் பகுதியில் 70 நாட்கள், சின்னமனூர் பகுதியில் 40 நாட்கள், வீரபாண்டி பகுதியில் 30 நாட்கள் என இவ்வாறு பலவித நிலையில் உள்ளன.


கம்பம் சின்ன வாய்க்கால் பகுதியில் மட்டும் சுமார் 2,000 ஏக்கரில் நெல் அறுவடை செய்யக்கூடிய நிலையில் உள்ளது. அந்த 2,000 ஏக்கருக்கு ஒருமுறை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் கொடுத்தால், 2,000 ஏக்கர் நெற்பயிர்களும் காப்பாற்றப்பட்டுவிடும். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து தண்ணீர் இல்லை என்று கூறி, 17 வாய்க்கால்களையும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடைத்துவிட்டார்கள்.


கம்பம் உத்தமபுரம் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மன்றாடிக் கேட்டும் தண்ணீர் திறந்துவிடாததால், 08.02.2014 அன்று அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் கொடுக்காவிட்டால், நெல்மணிகள் பால் ஏறாமல் பலனின்றி அழிந்துவிடும்.

எனவே, 12 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்ட 50 நாட்கள், 30 நாட்கள் பயிர்களையும் காப்பாற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும்" 


ஆனால் முதல்வர் ஜெ அவர்கள் இதை ஒரு பொருட்டாக கருதாமல் தன் சுய பெருமை பாடும் அடிவருடிகளுடன் வரும் தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்க தன் கட்சியில் இருந்து  4.70 கோடி ரூபாய் செலவில் ஒரு சமூகத்தை சேர்ந்த தனி நபருக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார்.


பலே வாழ்க ஜனநாயகம்!



சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது நினைவிருக்கிறதா? “சாதி, இன, மத, சமூக ரீதியாக துவேசத்தையும், பிளவுகளையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று தமிழக அரசின்நீதி நெறி பிறழா சத்திய ஆவேசத்தைமுழங்கினார் ஜெயா. இதன்படி பார்த்தால் நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட முதல்வரே தான் தூண்டி வருகிறார்


பொதுவில் இந்த ஆதிக்கசாதிக்கு வாக்கு அதிகம் என்பதால் பசும்பொன் தேவரை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் தேசியத் தலைவர் என்று வெறும் வாயிலில் பந்தல் போட்டு தேவர் சாதி வெறியர்களை மகிழ்விக்கிறார்கள்அரசு சார்பிலோ இல்லை ஆளும் கட்சி சார்பிலோ இத்தகைய ஆதிக்க சாதி ஆராதானைகளை செய்வது மாபெரும் குற்றமாகும். இதை ஒரு மாநிலத்தின் முதல்வரே செய்கிறார் என்றால் எங்கே பொய் முட்டிக்கொள்வது .


மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்