முன்னால் முதல்வர் அண்ணாதுரை கூறுகிறார்:
'நம் நாட்டில் எல்லாம் உள்ளது .நம் அதர்வண வேதத்தில் இருந்துதான் ஜெர்மானியன் பறக்கும் குண்டு, ஆகாயவிமானம் முதலியவற்றை தெரிந்துகொண்டான்.நம் நாட்டில் இல்லாத விமானமா...என்னென்ன அஸ்திரங்கள் இருந்தன. அக்னியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என்று! இன்று என்ன புதுமையாய் வந்து விட்டது' என்று நாட்டை பற்றி பெருமையோடு பேசுகின்றனர். ஆனால் அந்தப் பழம்பெருமை எங்கே இப்போது? அந்நியனுக்கு நாட்டை கொடுத்து விட்டு, ஆந்தை போல் விழிப்பது ஏன்? இதனால், நமக்கு பெருமை இல்லை சிறுமை தான்.
இது அந்நியனுடன் கொஞ்சிக் குலாவும் அழகிய நங்கையைக் கண்டு, அருகில் இருப்பவரிடம், 'இவள் யாரோ என்று எண்ணாதேயும்; இவள் என்னுடைய மனைவியாக இருந்தவள் தான்.இப்போது, இவளை, அவன் ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டான். ஆனாலும், என்னிடம் இருந்தவள் தானே...இதனால், எனக்கு எவ்வளவு பெருமை! என்று கூறுவதற்கு சமமாகும்!
-அண்ணாவின் அறிவுக்கனிகள் நூலில் இருந்து முல்லை முத்தையா