நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

வருத்தம்

அன்பு மக்களே,
தயவு செய்து விழியுங்கள், இன்னும் என்ன செய்தால் விழிப்பீர்கள்,
01. தண்ணீர் தனியார்மயம் ஆக்கியாகிவிட்டது...
02. அணைகள் அனைத்தும் நமக்கெதிராக மூடியாகிவிட்டது.
03. பல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அணு உலை தொடங்கப்படப் போகிறது.
04. காஸ் பைப்லைன் விவசாயிகளின் வயற்றில் அடித்து வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது...!
05. மீனவன் கொலை செய்யப்படுகிறான்,
௦6. இந்தியமும், உலகமும் நம்மை ஒட்டு மொத்தமாக கைவிட்டு விட்டது.
௦7. சிங்களன் இன்னமும் அங்கே தமிழ் மக்களை சீரழிக்கிறான், உறுப்புகள், உரிமைகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.!

என்ன மிதப்பில் இருக்கின்றீகள் தைரியமாய்....
தொலைக்காட்சி, ஊடகம் அனைத்தும் காட்டுவதை
நம்பும் கையாலாகாத, நிலைக்கெட்ட மாந்தராய் எத்தனை நாள் இருக்க போகிறோம்.
நீ என்ன பார்க்க வேண்டும்], நினைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக
இன்று நீ வளர்த்து விட்ட ஊடகங்கள் உள்ளன,

நீ பார்த்து வளர்த்துவிட்ட கூத்தாடிகள் இன்று அதன் பாடல்களில் உனக்கு அறிவுரை கூறுகிறது.
உனக்கு என்றால் வாய்மூடி, மெய்மூடி நிற்கிறது..

--
வளர்ச்சி என்ற பெயரில் இங்கே உருவாக்கப்படும் அனைத்தும்
உன்னையும்
உன் உழைப்பையும்
உன் ஆரோகியத்தையும்
உன் நாட்டின் வளத்தை சுரண்டியும் அவர்கள் பயன்பெற துவக்கப்படுவதுதான் காரணம்
வெளிநாடு செல்வேன் எனக் கூறினால், அங்கே உன் மீது கைவைத்தால் கேட்க நாதிக் கிடையாது...!
--

இதையெல்லாம் கூறினால் போராளி, முட்டாள் எனக் கூறுவதை நிறுத்துங்கள்.
திருந்துங்கள்... ! உங்கள் குருட்டு புத்தியால், தெளிவாய் இருப்பவனை குறைக் கூறாதீர்கள்...
இவர்களால் தான் இன்னும் நீங்கள் நிம்மதியாய் இருகின்றீர்கள் என்பதை மறுக்காதீர்கள்...!
நானும் ஆரம்பம் முதல் பார்த்துவிட்டேன்,
தமிழனுக்குத் தான்: ஏத்தனை துரோகங்கள், வலிகள், துரோகிகள்...!
எங்களை முன்னேற விடுங்கள்
உங்கள் தமிழ் இளைஞர்களை, கை கொடுங்கள், தோல் கொடுங்கள் ...!
எங்கள் தூக்கம், திறமைகள், கனவுகள் அனைத்தும் உங்கள் மெத்தனத்தால் களவாடப்படுகிறது...!
இன்று உன் எதிர்காலத்தை தீர்மானிக்கப்படாமல் விட்டால்.. நாளை எதிர்காலம் இல்லை...
அதுவும் மிகத்தொலைவில் இல்லை.
இன்னும் இரண்டு வருடம் போதும்..
இதை தமிழனை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அறிந்தவனுக்கு நன்று தெரியும்..

=========
நன்றி -குகன் தாஸ்