நமக்கு
எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
இந்திய நீதி
காட்டிலிருந்து அலறியடித்து ஓடிய பசுவைத் தடுத்த யானை, “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.
“காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது” என்றது பசு.
“நீ பசுதானே.. அப்புறம் ஏன் ஓடுகிறாய்?” என யானை கேட்க, “நான் பசுங்கிறது எனக்குத் தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை, பசுன்னு நிரூபிக்க 20 வருசமாயிடும்” என்றது பசு.
இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது.

மரம் நடுவோம் மழை பெறுவோம்
ஆயிரம் மரங்கள் மரணம்
ஆறுவழிச் சாலை ஜனனம்
அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்
“மரம் நடுவோம், மழை பெறுவோம்”
மிஸ்டு கால்
முள்ளை
முள்ளால
எடுக்க
முடியுமானு தெரியல,
ஆனா வீட்ல எங்கயோ வச்ச "செல்"ல "செல்"லால எடுக்க முடியும்.
மிஸ்டு கால்!
செல்பி
தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட ஒரு உறவு / நட்பு இல்லாத தனிமை சூழ்ந்த அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்றழைத்தனர்
தற்போதைய தமிழகம்
பணத்தால் தரை தட்டியது நீதியின் தட்டு
பணமற்றவனுக்கு சிறைக்குள் தட்டு!
நேர்மையாய் இருந்தால் பணியிடை மாற்றம்
நேர்மையற்றவனுக்கு வாழ்கையில் முனேற்றம்!
பணமிருந்தால் மருத்துவமனையில் தரமான சிகிச்சை
பணமற்றவனுக்கு கடமைக்காக ஒரு சிகிச்சை!
வயிற்று பிழைப்புக்கு 50, 100 திருடினால் திருடன்
பலகோடி திருடினால் தலைவன்!
பணமுள்ளவனுக்கு வாய்தா என்ற பெயரில் சுக வாழ்க்கை
பணமற்றவனுக்கு ஜெயிலுக்குள் சோக வாழ்க்கை!
பணமிருந்தால் தரமான கல்வி
பணமற்றவனுக்கு அனுபவமே கல்வி!
நாட்டிற்காக போர்முனையில் உயிரை தொலைக்கிறது ஒரு கூட்டம்
எதிரி என தெரிந்தும் கொஞ்சி உறவாடுகிறது மற்றொரு கூட்டம்!
கற்பழிக்க பட்டவள் மரணத்தின் பிடியில்
கற்பழித்தவன் ஒரு மாதத்தில் ஜாமீனில்!
உண்மையை மக்கள் அறிய சொல்லி ஜெயிலுக்குள் சிலர்
ஜால்ரா அடிப்பதால் அரியணையில் பலர்!
பணம் பேசிய பின்பே திறமைக்கு வாய்ப்பு
இதற்கு பெயர்தான் தற்போதைய தமிழகம்
Subscribe to:
Posts (Atom)