நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

இந்திய நீதி

காட்டிலிருந்து அலறியடித்து ஓடிய பசுவைத் தடுத்த யானை, “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.
காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும்
பிடிப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறதுஎன்றது பசு.
நீ பசுதானே.. அப்புறம் ஏன் ஓடுகிறாய்?” என யானை கேட்க, “நான் பசுங்கிறது எனக்குத் தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை, பசுன்னு நிரூபிக்க 20 வருசமாயிடும்என்றது பசு.
இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது.

வெற்றியின் புது இலக்கணம்

ஓவர்டேக் செய்வதல்ல
டேக்ஓவர் செய்வதே
வெற்றி!

செல்போன் டவர்

வயல்களில் நன்கு வளர்ந்து நிற்கிறது...
செல்போன் டவர்!

மரம் நடுவோம் மழை பெறுவோம்

ஆயிரம் மரங்கள் மரணம்
ஆறுவழிச் சாலை ஜனனம்
அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்

“மரம் நடுவோம், மழை பெறுவோம்”

மிஸ்டு கால்

முள்ளை முள்ளால எடுக்க முடியுமானு தெரியல, ஆனா வீட்ல எங்கயோ வச்ச "செல்" "செல்"லால எடுக்க முடியும்

மிஸ்டு கால்!

செல்பி

தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட ஒரு உறவு / நட்பு இல்லாத தனிமை சூழ்ந்த அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்றழைத்தனர் 

தற்போதைய தமிழகம்

பணத்தால் தரை தட்டியது நீதியின் தட்டு 
பணமற்றவனுக்கு சிறைக்குள் தட்டு!

நேர்மையாய் இருந்தால் பணியிடை மாற்றம் 
நேர்மையற்றவனுக்கு வாழ்கையில் முனேற்றம்!

பணமிருந்தால் மருத்துவமனையில் தரமான சிகிச்சை 
பணமற்றவனுக்கு கடமைக்காக ஒரு சிகிச்சை!

வயிற்று பிழைப்புக்கு 50, 100 திருடினால் திருடன் 
பலகோடி திருடினால் தலைவன்!

பணமுள்ளவனுக்கு வாய்தா என்ற பெயரில் சுக வாழ்க்கை 
பணமற்றவனுக்கு ஜெயிலுக்குள் சோக வாழ்க்கை!

பணமிருந்தால் தரமான கல்வி 
பணமற்றவனுக்கு அனுபவமே கல்வி!

நாட்டிற்காக போர்முனையில் உயிரை தொலைக்கிறது ஒரு கூட்டம் 
எதிரி என தெரிந்தும் கொஞ்சி உறவாடுகிறது மற்றொரு கூட்டம்!

கற்பழிக்க பட்டவள் மரணத்தின் பிடியில் 
கற்பழித்தவன் ஒரு மாதத்தில் ஜாமீனில்!

உண்மையை மக்கள் அறிய சொல்லி ஜெயிலுக்குள் சிலர் 
ஜால்ரா அடிப்பதால் அரியணையில் பலர்!

பணம் பேசிய பின்பே திறமைக்கு வாய்ப்பு 

இதற்கு பெயர்தான் தற்போதைய தமிழகம்

அட்வைஸ்


அட்வைஸ் என்பது ஆண்களின் தொப்புள் போல எவனும் ரசிக்கமாட்டான்



நிர்வாணம் ஆனது இயற்கை


மனிதன் நிர்வாணமாய் இருந்த போது இயற்கை மானமுடன் இருந்தது
மனிதன் நாகரீகம் அடைந்த பின் இன்று இயற்கை நிர்வாணம் ஆனது

நல்ல ஐடியா

ஆபீஸ் மீட்டிங்ல நாம சொன்ன ஐடியா நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்லிட்டா அதை நாம மட்டும் தான் செயல்படுத்தனும்னு அர்த்தம்.