உலகில் எவரும் முழுமையான துறவி இல்லை. வெறுமனே மனைவி, மக்களை, சுற்றத்தை துறந்துவிட்டதால் துறவி என்று அழைக்கலாகாது. எல்லா இன்பங்களையும் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அவ்வாறு உண்மையிலேயே துறக்கவில்லை. இவ்வுலகில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை கடமைகளைத் துறந்துவிட்டுச் சோம்பேறிகளாய்த் திரிதல் சாத்தியம். அது மிக சுலபம்கூட
.
இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை.
இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை.
1. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? இல்லை. சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும்.
2. ஆடையின்பத்தை இவர்கள் துறந்து விட்டார்களா? இல்லை.
3. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை.
4. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை.
5. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை.
6. புகழியின்பத்தைத் துறக்கவில்லை.
7. வாதின்பத்தைத் துறக்கவில்லை.
8. இவர்களில் முக்கியமாக மடாதிபதிகள் பணவின்பத்தையும் துறக்கவில்லை. இவ்வாறு இருப்பவர்களை எவ்வாறு எப்படி துறவு, துறவி என்று சொல்ல முடியும்?
"காவி உடை வேண்டாம்! கற்றைச் சடை வேண்டாம்! பாவித்தால் போதுமடா பரம நிலையெய்து தற்கே!"