நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

GYM - 100% Dedication


மகாகவி பாரதியாரின் பார்வையில் துறவி

உலகில் எவரும் முழுமையான துறவி இல்லை. வெறுமனே மனைவி, மக்களை, சுற்றத்தை துறந்துவிட்டதால் துறவி என்று அழைக்கலாகாது. எல்லா இன்பங்களையும் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அவ்வாறு உண்மையிலேயே துறக்கவில்லைஇவ்வுலகில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை கடமைகளைத் துறந்துவிட்டுச் சோம்பேறிகளாய்த் திரிதல் சாத்தியம். அது மிக சுலபம்கூட
.
இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை.

1. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? இல்லை. சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும்.
2. ஆடையின்பத்தை இவர்கள் துறந்து விட்டார்களா? இல்லை.
3. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை.
4. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை.
5. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை.
6. புகழியின்பத்தைத் துறக்கவில்லை.
7. வாதின்பத்தைத் துறக்கவில்லை.
8. இவர்களில் முக்கியமாக மடாதிபதிகள் பணவின்பத்தையும் துறக்கவில்லைஇவ்வாறு இருப்பவர்களை எவ்வாறு எப்படி துறவு, துறவி என்று சொல்ல முடியும்?

 "காவி உடை வேண்டாம்! கற்றைச் சடை வேண்டாம்! பாவித்தால் போதுமடா பரம நிலையெய்து தற்கே!" 

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…

வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும்,
பத்திரத்தை வங்கியிலும்,
என் மகனை வெளிநாட்டிலும் அடகு வைத்தேன்
கண்டிபாக ஒரு நாள் அவனையும் மீட்டுவிடுவேன்
ஆனால் அவன் இல்லாத ஊர் திருவிழாவையும்,
உறவினர் திருமணத்தையும்,
நண்பனின் மரணத்தையும்,
செல்போனிலும் பேஸ்புக்கிலும் கேட்டு கேட்டு
வாழ்கையையும், இளமைகாலத்தையும்,
தொலைத்த அவனை நான்
எப்படி மீட்டுதருவேன்?

வீசாவிற்க்கு பணம் கட்டி,
காதலுக்கு சமாதி கட்டி,
சூழ்நிலைக்கு தாலிகட்டி,
வட்டி கட்ட சென்றவனின்
மனைவியை தவறாகத்தானே
பார்கிறது இந்த சமூகம்!
பையன் பக்கத்தில் இல்லை என்றால்
பக்கத்து வீட்டுகாரன்கூட பகைக்க பார்க்கிறான்

என் மகன் வந்தால் சென்ட் வியாபாரியாக,
தைலம் விற்பவனாக,
ஃபாரின் சரக்கு தருபவனாகதான் பார்க்கிறார்கள்
ஆனால் என் கண்களுக்கு மட்டும்
அவன் வாளருந்த பட்டமாகதான்
தெரிகிறான்

உங்கள் குழந்தைகளுக்கு குடிப்பதும்,
புகைப்பதும் குற்றம் என்று சொல்லி தரும் நீங்கள்
கடன் வாங்குவதும் குற்றம் என்று சொல்லிக்கொடுங்கள்

வட்டிக்கு விடுவது பாவம் என்பார்கள்
அதை மாற்றி எழுதுங்கள்
வாங்கியவனே பாவம் என்று

சென்றிடுவோம் எட்டுத்திக்கும்...

"சென்றிடுவோம் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்

பாரதியாரின் இந்த வரிகளை முழுமையாக செயல்படுத்துபவர்கள் நம் தமிழ் சினிமாக்காரர்கள் தான்.  உலக சினிமாக்களை எல்லாம் காப்பி அடித்து தமிழில் புதுபடமாக திரைக்கு கொண்டுவந்து விடுகின்றனர். வேற்று மொழிப் படத்தின் கதையை  மட்டுமல்ல, காட்சிகளை  மட்டுமல்ல, படத்தின் போஸ்டர் உடன் காப்பி அடிக்கிறார்கள்

Tracking the status of a India passport sent by speed post

When your passport (India) has been dispatched, the details will be provided on the India Post website with the date as well as  postal registration number (9 digits). While tracking, you must type 'EX' and 'IN' before and after the 9 digit postal registration number respectively. This process is the same all over India.

Click Here to Track the status


மிளகு

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

"சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம்ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்
என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்பத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் (சுக்கு, மிளகு, திப்பிலி) மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள், வெங்காயம், உப்பு  இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு (ALOPECIA) உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.