நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தனிமை



எனக்கு பிடித்த என் நெறுக்கமான நண்பன்

என்னை எனக்கு அடையாளம் காட்டுபவன்

என் தோல்வியிலும்
என்னுடன் இருந்து என்னை தேற்றுபவன்

என்னைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சிந்திக்க வைப்பவன்

உறவுகள் பல இருந்தாலும்
உரிமையுடன் என்னுடன் எப்பொழுதும் இருப்பவன்

சில நேரங்களில் அழுகையை தருபவன்
பல நேரங்களில் எனக்கு ஆற்றலையும் தந்தவன்

இவன் தானாக வந்து என்னை ஆட்கொண்டவன்
அதனால் தானோ எப்பொழுதும் இனிக்கிறான்

இவன் கசப்பாக இருந்திருப்பான் வேறு யாராவது
இவனை என்னிடம் விட்டு சென்று இருந்தால் ...

இவன் சுயசிந்தனையின் ஊற்று ,
அமைதியின்  ஆளுமை....