நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தமிழக மின்சாரப் பிரச்சினை



தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும் .




தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது. அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்

கோவை. சா.காந்தி,

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111
9 அக்டோபர் 2012

Connections & Ports in vSphere 5

The below PDF provides all necessary connections & ports on vSphere 5.

Connections & ports in vSphere 5




Why visit Hindu temples regularly – a Scientific Reason




There are thousands of Hindu temples all over India in different size, shape and locations but not all of them are considered to be built the vedic way. Generally, a temple should be located at a place where earth's magnetic wave path passes through densely. It can be in the outskirts of a town/village or city, or in middle of the dwelling place, or on a hilltop. The essence of visiting a temple is discussed here.

Now, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic and electric wave distributions of north/south pole thrust. The main idol is placed in the core center of the temple, known as Garbhagriha or Moolasthanam. In fact, the temple structure is built after the idol has been placed. This Moolasthanam is where earth’s magnetic waves are found to be maximum. We know that there are some copper plates, inscribed with vedic scripts, buried beneath the Main Idol.

What are they really? they are not God’s or priests’ flash cards when they forget the Shlokas. The copper plate absorbs earth’s magnetic waves and radiates it to the surroundings. Thus a person regularly visiting a temple and walking clockwise around the Main Idol receives the beamed magnetic waves and his body absorbs it. This is a very slow process and a regular visit will let him absorb more of this positive energy. Scientifically, it is the positive energy that we all require to have a healthy life.

Further, the Sanctum is closed on three sides. This increases the effect of all energies. The lamp that is lit radiates heat energy and provides light inside the sanctum to the priests or temple pandit performing the pooja. The ringing of the bells and the chanting of prayers takes a worshiper into trance, thus not letting his mind waver. When done in groups, this helps people forget personal problems for a while and relieve their stress.

The fragrance from the flowers, the burning of camphor give out the chemical energy further aiding in a different good aura. The effect of all these energies is supplemented by the positive energy from the idol, the copper plates and utensils in the Moolasthanam. 

Theertham the holy water used during the pooja to wash the idol is not plain water cleaning the dust off an idol. It is a concoction of Cardamom, Karpura (Benzoin), zaffron / saffron, Tulsi (Holy Basil), Clove, etc..Washing the idol is to charge the water with the magnetic radiations thus increasing its medicinal values. Three spoons of this holy water is distributed to devotees. Again, this water is mainly a source of magneto-therapy. Besides, the clove essence protects one from tooth decay, the saffron & Tulsi leafs protects one from common cold and cough, cardamom and “Pachha Karpuram” (benzoin) act as mouth fresheners. It is proved that Theertham is a very good blood purifier, as it is highly energized. Hence it is given as prasadam to the devotees.

This way, one can claim to remain healthy by regularly visiting the Temples. This is why our elders used to suggest us to offer prayers at the temple so that you will be cured of many ailments. They were not always superstitious. Yes, in a few cases they did go overboard when due to ignorance they hoped many serious diseases could be cured at temples by deities.
 
When people go to a temple for the “Deepaaraadhana” and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. The water that is sprinkled onto the assemblages passes on the energy to all. This also explains why men are not allowed to wear shirts at a few temples and women are requested to wear more ornaments during temple visits. It is through these jewels (metal) that positive energy is absorbed by the women. Also, it is a practice to leave newly purchased jewels at an idol’s feet and then wear them with the idol’s blessings. This act is now justified after reading this article. This act of “seeking divine blessings” before using any new article, like books or pens or automobiles may have stemmed from this through mere observation.

Energy lost in a day’s work is regained through a temple visit and one is refreshed slightly. The positive energy that is spread out in the entire temple and especially around where the main idol is placed, are simply absorbed by one's body and mind. Our practices are not some hard and fast rules framed by one man and his followers or God’s words in somebody’s dreams. All the rituals, all the practices are, in reality, well researched, studied and scientifically backed thesis which form the ways of nature to lead a good healthy life.

The scientific and research part of the practices are well camouflaged as elder’s instructions or granny’s teaching’s which should be obeyed as a mark of respect so as to once again, avoid stress to the mediocre brains.



பதிவு 3

தமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி என ஆறு பல ஓடியது.

ஆனால் கரிகாலன் என்ற சோழமன்ணன் காவிரியின் குறுக்கே கட்டியது கல்லணை. அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டுர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி-குந்தா அணை பெறப்பட்டது.


அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். 


மறக்க(டிக்க)ப்பட்ட அந்த நெடிய பட்டியல் இதோ,

1. ரூ 5 கோடியில் மலம்புழா அணை - 46,000 ஏக்கர் பாசன வசதி
2. தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை - 20,000 கூடுதல் பாசன வசதி
3. ரூ 3 கோடியில் அமராவதி அணை - 47,000 ஏக்கர் பாசன வசதி
4. ரூ 2.5 கோடியில் சாத்தனூர் அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
5. ரூ 2.5 கோடியில் வைகை அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
6. ரூ 1 கோடியில் வாலையார் அணை - 6,500 ஏக்கர் பாசன வசதி
7. ரூ 50 லட்சத்தில் மங்கலம் அணை - 6,000 ஏக்கர் பாசன வசதி
8. ரூ 1 கோடியில் ஆரணியாறு அணை - 1,100 ஏக்கர் பாசன வசதி
9. ரூ 2 கோடியில் கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசன வசதி
10. வீடுர் அணை.
11. பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகள்.
12. ரூ 2.5 கோடியில் மேட்டூர் பாசன கால்வாய் - 45,000 ஏக்கர் பாசன வசதி
13. ரூ 30 லட்சத்தில் புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்
14. ரூ 10 கோடியில் கீழ் பவானி திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசன வசதி
15. ரூ 1.5 கோடியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர் பாசன வசதி
16. ரூ 1.5 கோடியில் புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசன வசதி
17. ரூ 1.5 கோடியில் மீனக்கரை ஏரித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
18. ரூ 75 லட்சத்தில் மணிமுக்தா நதித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
10. ரூ 75 லட்சத்தில் கோமுகி ஆற்றுத்திட்டம் - 8,000 ஏக்கர் பாசன வசதி
20. ரூ 75 லட்சத்தில் தோப்பியார் ஏரி - 2,500 ஏக்கர் பாசன வசதி


நன்றி: www.facebook.com/ayyakamarajar

சிந்திக்க...

"இலவசம்" என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தன்மானத்தையும் உரசிப்பார்க்கும் சமாசாரம்தான்.

இது இன்றைக்கு நேற்றைக்கு உருவானதும் அல்ல.

1967-ல் தன் சொந்தத் தொகுதியில் காமராஜ் என்ற மகத்தான மக்கள் தலைவன், அந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்ட போதே தொடங்கிவிட்டது.
அன்று காமராஜ் தோல்விக்குக் காரணமாக இருந்ததும் இதே "இலவசம்" தான். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி ஒரு களங்கமற்ற தலைவனைத் தூக்கிய எறியவும் மக்கள் தயாரானார்கள்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவக முகம் அன்றைக்குப் புரியாமல் போனது. அது தமிழினத்தின் மீது படியத் தொடங்கிய தீட்டு என்பதும் அன்றைக்குத் தெரியாமல் போனது. எவனுக்கு ஓட்டுப் போட்டால், அடுத்த ஐந்தாண்டுகள் நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்
என்று யோசிக்க வேண்டுமே தவிர, எவனுக்கு ஓட்டுப் போட்டால்,இன்று குடிக்க ஒரு குவார்டர் கிடைக்கும் என்று யோசிக்கக் கூடாது!

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள் மட்டுமே ஆனால்  அவர்  ஆட்சியை விட்டு இறங்கிய போது 14 ஆக உயர்ந்திருந்தது. 

இன்னும்,

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன). அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில் 5 முறை ஆட்சி நாற்காலியை ஆக்கிரமித்த திமு எவ்வளவு சாதனைகளை இதுவரை
செய்தது? 5 முறை ஆட்சியைப் பிடித்த திமுஎன்ன செய்தது?

இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா?

இல்லை

"இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா?


பதிவு 1

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜர்  பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர்; தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார்

Never Giveup !


Virtual Tour



Virtual tour,  It is a wonderful work. I Appreciate the team to keep going. All the best.


Indian National Anthem

Just a thought for the Inidian National Anthem! How well do you know it?

Our national anthem, 'Jana Gana Mana', is sung throughout the country. Did you know the following about it?

I didn't. I have always wondered who is the 'Adhinayak'and 'Bharat Bhagya Vidhata', whose praise we are singing. I have always thought it might be Motherland India!

To begin with, Jana Gana Mana, was written by Rabindranath Tagore in honor of King George V and the Queen of England when they visited India in 1919. To honour their visit, Pandit Motilal Nehru had five stanzas included that are in praise of the King and Queen. (And most of us think it is in praise of our great motherland.)

In the original Bengali verses only those provinces that were under British rule, i.e., Punjab, Sindh, Gujarat, Maratha, were mentioned. None of the princely states, which are integral parts of India now, such as Kashmir, Rajasthan, Andhra, Mysore and Kerala, were recognized.

Neither the Indian Ocean nor the Arabian Sea were included because they were directly under Portuguese rule at that time.

Jana Gana Mana implies that King George V is the lord of the masses and Bharata Bhagya Vidhata, or 'the bestower of good fortune'.

Here is a translation of the five stanzas that glorify the King.
Stanza 1:
The (Indian) people wake up remembering your good name and ask for your blessings and they sing your glories (Tava shubha name jaage; tava shubha aashish maage, gaaye tava jaya gaatha)

Stanza 2:
Around your throne, people of all religions come and give their love and anxiously wait to hear your kind words.

Stanza 3:
Praise to the King for being the charioteer, for leading the ancient travellers beyond misery.

Stanza 4:
Drowned in deep ignorance and suffering, this poverty stricken, unconscious country? Waiting for the wink of your eye and our mother's (the Queen's) true protection.

Stanza 5:
In your compassionate plans, the sleeping Bharat (India) will wake up. We bow down to your feet, O Queen, and glory to Rajeshwara (the King).

This whole poem does not indicate any love for the Motherland, but depicts a bleak picture of it. When you sing Jana Gana Mana, whom are you glorifying? Certainly, not the Motherland. Is it God? The poem does not indicate that. It is time now to understand the original purpose and the implication of this, rather than blindly sing as has been done the past 60+ years.

Maybe we should shift to Vande Mataram or Saare Jahan Se Achcha, which are far better compositions in praise of India.

How Japanese Fish Stay Fresh!


The Japanese love fresh fish. However, the water close to Japan has not held many fish for decades. Therefore, to feed the Japanese population, fishing boats got bigger and went farther than ever.

The farther the anglers went, the longer it took to bring in the fish. If the return trip took more than a few days, the fish were not fresh. The Japanese did not like the taste.

To solve this problem, fishing companies installed big freezers on their boats. They would catch the fish and freeze them at sea. Freezers allowed the boats to go farther and stay longer. That was a great solution and they thought that the problem is solved forever. They celebrated their invention.

They were very disheartened to know that the Japanese could taste the difference between fresh and frozen and they did not like frozen fish. They were not ready to buy them. The frozen fish brought a lower price. There was again a question of survival of the fishing industry.

After deep discussions, many sleepless nights, again a solution came into their minds. They were doubtful but still they thought that’s its worth working. A genius suggested installing fishing tanks so that fishes must get the natural environment to live. So fishing companies installed fish tanks. They would catch the fish and stuff them in the tanks, fin to fin. They thought that the problem is fixed now

However, the fishes displayed a different nature. Since the size of tanks had their own limitations after a little thrashing around, the fish stopped moving. They were tired and dull, but alive.

Unfortunately, the Japanese could still taste the difference. Because the fish did not move for days, they lost their fresh-fish taste. The Japanese preferred the lively taste of fresh fish, not sluggish fish.

So how did Japanese fishing companies solve this problem? How do they get fresh-tasting fish to Japan? If you were consulting the fish industry, what would you recommend?

How Japanese Fish Stay Fresh?
To keep the fish tasting fresh, the Japanese fishing companies still put the fish in the tanks. However, with a management solution, real life solution, now they add a small shark to each tank. The shark eats a few fish, but most of the fish arrive in a very lively state.

The reason, the fish were challenged…
 
The moral of the story:
  • Instead of avoiding challenges, jump into them. Beat the heck out of them. Enjoy the game.
  • If your challenges are too large or too numerous, do not give up.
  • Failing makes you tired. Instead, reorganize. Find more determination, more knowledge, more help.
  • If you have met your goals, set some bigger goals.
  • Once you meet your personal or family needs, move onto goals for your group, the society, even mankind.
  • Don’t create success and lie in it. You have resources, skills and abilities to make a difference.
  • Put a shark in your tank and see how far you can really go!